உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு துவங்கியது; பிரதமரை வரவேற்றார் சீன அதிபர்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு துவங்கியது; பிரதமரை வரவேற்றார் சீன அதிபர்

தியான்ஜென்: சீனாவின் தியான்ஜென் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்றார்.ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 7 ஆண்டுகளுக்கு பின் நேற்று சீனா சென்றார். 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதை அடுத்து, இருநாட்டு உறவும் பாதிக்கப்பட்டது. அதேவேளையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில் பிரதமர் மோடியின் இந்த சீன பயணம் உலக நாடுகளை உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.இந்த சூழலில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியா மற்றும் சீனா பரஸ்பர வளர்ச்சி நட்பு நாடுகளே தவிர, போட்டியாளர்கள் அல்ல என்பதை இரு நாட்டு தலைவர்களும் உறுதிபடுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது என்பதை தீர்மானித்துள்ளனர், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், சீனாவின் தியான்ஜென் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்றார். பின்னர், ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்கள் ஒன்றாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஒரே இடத்தில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M Ramachandran
ஆக 31, 2025 23:35

நமக்கு ஒரு நாளையைக்கு நண்பானாய் தொஆற்றம் அளிப்பவன் சுய நலத்துடன் மறுநாள் விரோதம் காட்டுறான். விரோதம் காட்டிக்கொண்டிருந்தவன் நட்பாக மாறுகிறான்.நிரந்தர நண்பனுமில்லையய நிரந்தர விரோதியும் இல்லை. ஆனால் என்றுமே நட்பை காட்டுகிற ரசிய நம் கூட இருப்பது அமெரிக்கானுக்கு கண்ணுறுதல். அவன் வீணா போன ராணுவ தளவாடங்களை நம் தலையில் காட்டவே நெறம் பார்த்து கொண்டு நட்பு என்று பாசங்க்கு செய்கிறான். இப்போ சாயம் வெளுத்து போக நம் மீது கோபம் கொப்பளிக்கிறது


Venkataraman Subramania
ஆக 31, 2025 18:19

All Asian Countries should united and show solidarity to US President Mr. Donald Trump. He should be taught a lesson on the Tariff Issue. He should be shown what will happen if he opposes the entire world and takes advantages. Good to see good results from this SCO meet Jai Hind Bharat Mata Ki Jey


முக்கிய வீடியோ