உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு

மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாகா: மாணவர்கள் போராட்டத்தின் போது அதனை ஒடுக்குவதற்காக, பிரதமர் ஆக இருந்த ஷேக் ஹசீனா மனிதநேயத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டார் என வங்கதேச அரசு குற்றம்சாட்டி உள்ளது.வங்கதேசத்தில், கடந்த 2024ம் ஆண்டு மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் ஆக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ள வங்கதேச இடைக்கால அரசு, நாடு கடத்தும்படி இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால், இது குறித்து மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனிடையே ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. அவருக்கு எதிராக வழக்கு நடந்து வருகிறது.இந்நிலையில், மாணவர்கள் போராட்டத்தின் போது, அதனை ஒடுக்க வேண்டும் என்பதற்காக ஷேக் ஹசீனா மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் மனித நேயத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டார் என வங்கதேச அரசு குற்றம்சாட்டி உள்ளது.இது குறித்த வழக்கு விசாரணையின் போது, அரசு வழக்கறிஞர் தஜூல் இஸ்லாம் கூறுகையில், மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினர், கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஹசீனா நேரடியாக உத்தரவிட்டார். இதனால், ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகள் எல்லாம் திட்டமிடப்பட்டவை. ஹசினா தான் அரசின் தலைவர் என்பதால், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு அவர் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனக்கூறியதுடன் அது குறித்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் தகவல்பரிமாற்றங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.இந்த வழக்கில் 81 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ganapathy
ஜூன் 01, 2025 20:35

இவரின் மனித உரிமையை பங்களாதேஷ் அரசு ஏன் மதிக்கவில்லை?


N Sasikumar Yadhav
ஜூன் 01, 2025 18:41

மனிதநேயத்தை பற்றி கசாப்புக்காரன் பேசுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது


Padmasridharan
ஜூன் 01, 2025 16:21

இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது.


ஆரூர் ரங்
ஜூன் 01, 2025 16:13

அப்போ கும்பல் ஆயிரக்கணக்கான ஹிந்துகளை இனப் படுகொலை செய்து ஆலயங்களை எரித்தது மனிதாபிமான செயல்?.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை