உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா புளோரிடா பல்கலை.யில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

அமெரிக்கா புளோரிடா பல்கலை.யில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலை.யில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் பலியாயினர்.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புளோரிடா ஸ்டேட் பல்கலை. உள்ளது. இங்குள்ள வாளாகத்தில் நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் இரண்டு பேர் பலியாயினர். 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.,யும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஏப் 18, 2025 08:58

துப்பாக்கி சூடு நடத்தியவர் 20 வயது இளைஞர். அவனது அப்பா போலீஸ் ஏட்டு. அப்பாவின் சர்வீஸ் துப்பாக்கியை வீட்டிலிருந்து தெரியாம எடுத்து வந்து சுட்டிருக்கார். தெரியாம கருத்து சீன் போடாதீங்க.


Kasimani Baskaran
ஏப் 18, 2025 08:11

வேட்டைக்கு வைத்திருக்கும் பெரிய அளவிலான துப்பாக்கியை உபயோகிக்காமலேயே அல்லோல கல்லோலப்படுகிறது அமெரிக்கா. இன்னும் பெரிய துப்பாக்கிகளை வெளியே எடுத்தால் நாடு தாங்காது.


Sankar
ஏப் 18, 2025 07:12

துப்பாக்கி யார் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம் என்பது மாற வேண்டும் .அப்பாவி உயிர்கள் பாதுகாக்க பட வேண்டும்


Raj
ஏப் 18, 2025 06:41

வரியை விதித்து தீட்டும் டிரம்ப்க்கு துப்பாக்கி கலாச்சாரத்தை அடக்க திராணி கிடையாது. இது தான் யு எஸ் விடியல் ஆட்சி போல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை