அமெரிக்கா பல்கலையில் துப்பாக்கி சூடு: இருவர் பலி; 8 பேர் படுகாயம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பல்கலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில்: இருவர் பலியாகினர்; எட்டு பேர் படுகாயம்அடைந்தனர்.: அமெரிக்காவின் ரோடு தீவு மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற பிரவுன் பல்கலையில் நேற்று முன்தினம், மாணவர்கள் இறுதித்தேர்வை எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் மாணவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்; எட்டு பேர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு மர்ம நபர் தப்பி விட்டதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டொனால்டு டிரம்ப், இது பயங்கரமான செயல் என்றார்.