UPDATED : ஜூன் 24, 2024 09:02 AM | ADDED : ஜூன் 24, 2024 08:57 AM
மாஸ்கோ: ரஷ்யாவில் வழிபாட்டுத்தலம் மற்றும் போலீசார் முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 15 போலீசார் பலியாகினர். ஆலயத்துக்கு வந்த ஒரு பக்தர் பலியானார்டெர்பண்ட் அருகே மக்காஹலா நகரில் இந்த தாக்குதல் ஒரே நேரத்தில் நடந்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார், எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. ரஷ்ய போலீசார் விசாரித்து வருகின்றனர். முக்கிய நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 145 பேர் கொலை
3 மாதங்களுக்கு முன்னதாக மாஸ்கோ அருகே நடந்த தாக்குதலில் 145 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. உக்ரைன்- ரஷ்ய போர் காரணமாக ரஷ்ய மக்கள் தொடர் இன்னலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.