உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கமலா ஹாரிஸ் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு: அமெரிக்கா தேர்தல் களத்தில் திக்...திக்...!

கமலா ஹாரிஸ் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு: அமெரிக்கா தேர்தல் களத்தில் திக்...திக்...!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், 59, போட்டியிடுகிறார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அரிசோனா மாகாணம் டெம்பேவில் உள்ள சதர்ன் அவென்யூ ப்ரீஸ்ட் டிரைவ் அருகே கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடந்த போது அலுவலகத்திற்குள் யாரும் இல்லை. சுவர்களில் தோட்டாக்களால் சேதம் ஏற்பட்டுள்ளது. முன்பக்க ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரியவந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்படவில்லை.போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை பிரசார கூட்டத்தில் ஒருமுறையும், கோல்ப் மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்த போது ஒரு முறையும் துப்பாக்கிச்சூடு நடத்தி கொல்ல முயற்சி நடந்தது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முக்கிய வேட்பாளர்களை குறிவைத்து தாக்குதல் சம்பவம் நடந்து வருவது அமெரிக்கா தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஆரூர் ரங்
செப் 25, 2024 18:53

கருணாநிதிக்கு தங்கை.


Nagendran,Erode
செப் 25, 2024 19:38

கருணாநிதிக்கு தங்கை என்பதை வன்மையாக கண்டிக்கிறேன் அவர் கட்டுமரத்திற்கு அக்கா என்பதே சரி..


அருகுமார்
செப் 25, 2024 17:59

ரெண்டு பார்ட்டி வேட்பாளர்களையும் பிடிக்கலை போலிருக்கு


Murthy
செப் 25, 2024 17:11

எங்களுக்கும் துப்பாக்கிசூடு நடத்த தெரியும் . ....... அதிலேயும் நான் திருவாரூர்காரியாக்கும்....... தமிழ்நாட்டில் திருவாரூர்க்காரனை பற்றி கேட்டு தெரிந்துக்கொ Trump .


Kumar Kumzi
செப் 25, 2024 14:16

அனுதாப ஓட்டுகளுக்காக போடும் நாடகம்


vidhu
செப் 25, 2024 12:41

இவங்களே சுட்டுப்பொங்கலம். அப்போதானே டிரம்ப் க்கு மட்டும் இப்படி நடக்குதுன்னு யாரும் சொல்ல மாட்டாங்க


sankaranarayanan
செப் 25, 2024 12:39

இதென்னடா துப்பாக்கி கலாசாரமாகி போயிடுச்சே - சே - சே- இதுதான் அமெரிக்கா கலாச்சாரமா இதை முதலில் சென்ற தேர்தல் ஆரம்பித்ததே டிரம்புதான் அவருடைய சிஷ்யர்கள் பாராளுமன்றத்தினுள் சென்று சபை நாயகியை கொள்ள சதி தீட்டி ஜன்னல்களையெல்லாம் உடைத்து பாழாக்கினார்கள் இந்தியா தேவலாம் போலத்தான் உள்ளது


Ramesh Sargam
செப் 25, 2024 12:29

அதிபர் தேர்தலில் போட்டியிடும் இருவர் மீதும் துப்பாக்கி சூடு. இதில் மக்கள் யாருக்கு பரிதாபப்பட்டு ஆதரித்து யாரை அடுத்த அதிபராக தேர்ந்தெடுப்பார்கள். ட்ரம்ப் மீது நேரடியாக துப்பாக்கி சூடு. கமலா ஹாரிஸ் அலுவலகத்தில் சூடு. பார்த்தால் டிரம்புக்கு அதிக ஆதரவு கிடைக்குமோ...? யாருக்கு ஆதரவு கிடைத்து யார் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கூட அவர்கள் இந்த தொடர் துப்பாக்கி சூடு பிரச்சினைக்கு முடிவு காண்பார்களா என்பது சந்தேகம்தான் .


Srinivasan Krishnamoorthi
செப் 25, 2024 12:21

இப்போது தான் கமலா ஹாரிஸ் அவர்கள் அமெரிக்காவின் ஒரு அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ள பட்டிருக்கிறார் என கொள்வோம்


Colut
செப் 25, 2024 11:59

Likely to have been staged by deep state. Elon Musk questioned why only Donald Trump is attacked and why not Kamala Harris.


புதிய வீடியோ