உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எனக்கு நோபல் பரிசு கொடுத்தே ஆக வேண்டும்: மறுபடியும் டிரம்ப் அடம்

எனக்கு நோபல் பரிசு கொடுத்தே ஆக வேண்டும்: மறுபடியும் டிரம்ப் அடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியா, பாகிஸ்தான் மோதலை நிறுத்திய எனக்கு கட்டாயம் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தமது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.அமெரிக்க அதிபராக பதவியேற்றாலும் அவரின் அதிரடி நடவடிக்கைகள் குறையவில்லை என்று மக்களிடையே பெயர் பெற்றிருக்கிறார் டிரம்ப். தற்போது ஹெச் 1 பி விசா நடைமுறைகள் மூலம் உலக நாடுகளை முணுமுணுக்க வைத்துள்ள அவர் மே 10ம் தேதி முதல் பேச ஆரம்பித்த நோபல் பரிசு விவகாரத்தை மீண்டும் பேச ஆரம்பித்து இருக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8f50x9m8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உலக நாடுகள் இடையே 7 போர்களை நிறுத்தியவன், இந்தியா-பாக். மோதலும் என்னால் தான் தீர்த்து வைக்கப்பட்டது என்று விடாமல் அறிவித்து வருகிறார் டிரம்ப். அவரின் கூற்றை இந்தியா முற்றிலும் நிராகரித்துள்ளது. 3ம் நாட்டின் தலையீட்டை அனுமதித்தது இல்லை என்றும் விளக்கம் அளித்துவிட்டது.ஆனாலும், இந்தியா, பாகிஸ்தான் மோதலை முன்வைத்து அதை நான் தான் தீர்த்து வைத்தேன், எனவே எனக்கு நோபல் பரிசை தர வேண்டும் என்று அமெரிக்காவில் கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது தமது ஆசையை போட்டு உடைத்திருக்கிறார்.அந்த நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது: உலக அரங்கில், மதிக்கப்படும் பல விஷயங்களை செய்கிறோம். சமாதான உடன்படிக்கைகளை ஏற்படுத்துகிறோம். இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து-கம்போடியா நாடுகள் இடையேயான போர்களை நிறுத்தினோம். இந்தியா-பாகிஸ்தான் நாடுகளை நினைத்து பாருங்கள், யோசித்து பார்த்தீர்கள் என்றால் நான் எப்படி அந்த போரை நிறுத்தினேன் என்று உங்களுக்கு தெரிய வரும். வர்த்தக ஒப்பந்தங்களை முன் வைத்து போரை நிறுத்தினேன். அந்நாடுகளின் தலைவர்கள் மீது எனக்கு அளவுகடந்த மரியாதை உண்டு. இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, அர்மீனியா, அஜர்பைஜான், கொசோவோ, செர்பியா, இஸ்ரேல், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ருவாண்டா, காங்கோ நாடுகள் இடையே எழுந்த போர்களை நாங்கள் நிறுத்தினோம். இந்த போர்களில் 60 சதவீதம் வர்த்தகத்தை சுட்டிக்காட்டி நிறுத்தினோம்.இந்தியாவை போன்று நானும் சொன்னேன். இங்கே பாருங்கள், நீங்கள் சண்டை போட போகிறீர்கள் என்றால், அவர்களிடம் (இந்தியாவை இங்கே குறிப்பிடுகிறார்) அணு ஆயுதங்கள் இருந்தால், நாம் எந்த வர்த்தகமும் செய்ய போவது இல்லை என்று நான் சொன்னேன். உடனே அவர்கள் போரை நிறுத்திவிட்டனர். எனக்கு ஒவ்வொருத்தரும் (மற்ற 7 நாடுகளை கூறுகிறார்) ஒரு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் அவர்களோ, நீங்கள் ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்தினால் நோபல் பரிசு கிடைக்கும் என்று சொன்னார்கள். அது ஒரு போர், அதுவும் மிக பெரிய போர். நான் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன் என்று சொல்லி இருக்கிறேன்.இவ்வாறு டிரம்ப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

ஆரூர் ரங்
செப் 21, 2025 21:52

அப்போ நம்ம தளபதி ஜெயகடா வுக்கும் ஒரு நோ பல் பரிசு பார்சல்.


Santhakumar Srinivasalu
செப் 21, 2025 21:23

வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிவிட்டது!வேதாளத்தை ஓட்ட மந்திரவாதி தேவைன்னு அமெரிக்க விளம்பரம் சீக்கிரம் வரும்!


Santhakumar Srinivasalu
செப் 21, 2025 19:23

வரி மிரட்டலை வைத்து சில போர்களை நிறுத்தனா நோபல் பரிசை தூக்கி இந்த பைத்தியகாரனுக்கு கொடுத்திருவாங்களா?


sankaranarayanan
செப் 21, 2025 19:20

எனக்கு ஒவ்வொருத்தரும் மற்ற 7 நாடுகளை கூறுகிறார் ஒரு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று நான் சொன்னேன். இவ்வாறு அமெரிக்க திபர் டிரம்பு கூறிய பல நாடுகளை ரகசியமாக சண்டையை ஊக்குவித்து ஆரம்பிக்கச்சொல்லி புண்ணியவான் இவர்தான் .இன்னும் என்ன வேண்டும் அமெரிக்க அதிபர் பதவி போதாதாம் இன்னும் நோபல் பரிசு வேறு வேண்டுமாம் இதற்கு உண்டான எல்லா குறுக்கு வழிகளையும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்தநாடுகளில் கலகம் இவரே உண்டாக்கி, தனது தலையிடு செய்து அந்த நாடுகளில் பெரிய குழப்பதை பிறகு தீர்த்து வைப்பாராம் பிறகு இவருக்கு பரிசாம் இவருக்கு அவர்நாட்டில் வேறு ஆக்க பூர்வமாக செய்ய அவரது நாடு முன்னேற ஒரு செயலும் கிடையாதா


D.Ambujavalli
செப் 21, 2025 18:35

‘எனக்கு நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யாவிட்டால் H1B விசா கட்டணத்தை 2 கோடியாக்கிவிடுவேன் ஜாக்கிரதை’ என்றுகூட சவால் விடுவார். மிட்டாய், ஐஸ் கிரீம் என்று ஆடம் பிடித்து அழும் குழந்தையைப்போல ஆகிவிட்டார் இவர்


Manogyanathan
செப் 21, 2025 18:13

Mr.Trump is be like a person who lost all his sense of purpose, excepting getting Nobel prize. Oflate his utterances have become autocratic.


ramesh
செப் 21, 2025 18:10

இவர் நோபல் பரிசு என்று அடம் பிடிப்பதை பார்த்தால் LKG படிக்கும் குழந்தைகள் எனக்கும் கையில் ஸ்டார் போட்டு விடுங்கள் என்று டீச்சர் இடம் அடம் பிடிப்பதை போல இருக்கிறது


கடல் நண்டு
செப் 21, 2025 18:03

இந்த ஜோக்கர் சில வருடங்கள் பொறுத்தால் வயதீகம் மற்றும் மனநிலை காரணமாக அனைத்து பற்களும் இழந்து இயற்கையான “நோ பல்” விருதினை பிறரிடம் யாசகம் பெறாமல் இலவசமாக பெறலாம்.. மிகுந்த அவசரமெனில் பரம்பரை திராவிட, இரும்புக்கரம் கொண்ட ஓங்கோல் சர்வாதிகாரி மாமா மன்னரை அணுகவும் ..


என்றும் இந்தியன்
செப் 21, 2025 17:39

இங்கே பாரு எனது கணிப்பு நீ இன்னும் இருக்கப்போறது 82 நாட்கள் அதுக்குள்ளே உனக்கு நோபல் பரிசு எதற்கு???


K.n. Dhasarathan
செப் 21, 2025 17:14

வர வர கோமாளிகள் தொல்லை அதிகமாகிவிட்டது இவர்கள் வெளியில் நடமாடினாலே பிரச்சினை இதில் பொறுப்புகளை கொடுத்தால் அமெரிக்கா மாதிரி கையை சுட்டுக்கொண்ட மாதிரிதான் அவர்களே போராடி ட்ரம்பை வெளியேற்றும் நாள் தொலைவில் இல்லை.


முக்கிய வீடியோ