உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீக்கிய பயங்கரவாதி கொலை முயற்சி வழக்கு : இந்தியரை நாடு கடத்த தடை

சீக்கிய பயங்கரவாதி கொலை முயற்சி வழக்கு : இந்தியரை நாடு கடத்த தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பராகு: அமெரிக்க சீக்கிய பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னு கொல்ல முயற்சி வழக்கில் செக்குடியரசு நாட்டில் கைதான இந்தியரை நாடு கடத்தி கொண்டுவர அமெரிக்காவின் கோரிக்கைக்கு அந்நாட்டு கோர்ட் தடை விதித்தது. அமெரிக்காவில், சீக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுவை, கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. இந்த விவகாரத்திலும் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழலாம் என செய்திகள் வெளியாயின..இந்நிலையில் நியூயார்க் நகர போலீசார் நிகி்ல் குப்தா என்ற இந்தியர் கடந்தாண்டு ஜூனில் செக்குடியரசு நாட்டில் கைது செய்துள்ளதாக தெரிவித்தது.இவர் தான் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவை கொல்ல முயற்சித்ததாகவும் குற்றச்சாட்டுபதிவு செய்துள்ளது. அவரை நாடு கடத்திடவும் அமெரிக்க சட்ட நடவடிக்கை எடுத்தது.இது தொடர்பாக நடந்த வழக்கில் நிகில் குப்தாவை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்தது. நாடு கடத்துவதில் பல்வேறு சட்டசிக்கல்கள் இருப்பதால் அரசியல் சாசன நீதிமன்ற அனுமதி தேவை என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி