உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதானி குழுமத்தின் ஆறு சுவிஸ் வங்கி கணக்குகள் முடக்கம்:

அதானி குழுமத்தின் ஆறு சுவிஸ் வங்கி கணக்குகள் முடக்கம்:

புதுடில்லி: சுவிஸ் வங்கிகளில் தொழிலதிபர் அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கி கணக்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த, 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' நிறுவனம் 'அதானி' குழும நிறுவனங்கள் சந்தையை தவறாக கையாண்டு, கணக்குகளில் மோசடிகள் செய்துள்ளதாக குற்றம்சாட்டி கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கை பங்கு சந்தையில் அதிர் வலையை ஏற்படுத்தியது. இதனை மறுத்த அதானி குழுமம் ஹிண்டன்பர்க் மீது சட்டநவடிக்கை எடுத்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7n955ss2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் சுவிஸ் வங்கி நிர்வாகம் அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கி கணக்குகளை முடக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக வெளியான தகவலில், சுவிட்சர்லாந்தில் ‛‛ கோதம் சிட்டி'' என்ற புலனாய்வு இணையதள செய்தி நிறுவனம், 2021-ம் ஆண்டு, அதானி குழுமம் பண மோசடி, மற்றும் பங்குபரிவர்த்தனையில் மோசடி செய்துள்ளதாக செய்தி வெளியிட்டதை ஹிண்டன்பர்க் தனது ‛எக்ஸ்' தளத்தில் பகிர்ந்தது.இதையடுத்து சுவிட்சர்லாந்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணை நடத்தி, அதானியின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சுவிஸ் வங்கி தொடர்பான செய்தியில் உண்மையில்லை என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

R.Varadarajan
செப் 13, 2024 16:54

அதானி குழுமத்தின் கணக்குகளை மட்டுமா அவரை விட, பல மடங்மஙகுள்ற்றள மற்ற இந்திய பணமூட்டைகள், ஊழல்வாதிகள் மற்றும் அரசியல்வாதிகளுடைய கணக குகள்?


enkeyem
செப் 13, 2024 11:58

பப்பு அமெரிக்காவுக்கு சென்றதற்கும், இந்த செய்திக்கும் தொடர்பு உள்ளது. இது சமீபத்தில் நடக்க இருக்கும் மாநில அரசு தேர்வுகளுக்கு பி ஜெ பிக்கு எதிரான டூல்கிட் என்றே தெரிகிறது


enkeyem
செப் 13, 2024 11:55

நிலக்கரி எடுக்கும்போது உயர்ந்த தரம் நடுத்தரம் குறைவான தரம் என தரம் பிரித்துதான் தரத்துக்கு தக்கவாறு விலை நிர்ணயம் செய்து மார்க்கெட்டில் விற்பனை செய்வார்கள். தமிழக அரசு தரம் குறைத்த நிலக்கரியை அதிக விலைக்கு வாங்கி ஊழல் செய்தது. இது அதானி குழுமத்தின் தவறா?


Narayanan Muthu
செப் 13, 2024 09:45

மோடி மற்றும் இந்திய வங்கிகள் இருக்கும் வரை அதானியின் எத்தனை வங்கிகள் முடக்கப்பட்டால் என்ன. இதுவரை நாற்பத்தாறு லட்சம் கோடி தள்ளுபடியுடன் கூடுதலாக கடன் பெற்று அதையும் தள்ளுபடி பெயரில் நேர் செய்து கொள்ள போகிறார்.


S.Martin Manoj
செப் 13, 2024 09:10

இருக்கும் வரை அதானி கவலைப்பட தேவையில்லை


Sankar ARUMUGAM
செப் 13, 2024 08:31

அதானி பங்குகள் உயரும் ஒவ்வொரு முறையும் இது போல் ஒரு செய்தி வேண்டும் என்றே பரப்புறாங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 13, 2024 06:10

லோ குவாலிட்டி நிலக்கரியை டுமீலு நாட்டுக்கு வித்து அதானி காசு பார்த்ததை உலகமே மறந்திருச்சே ????


Kasimani Baskaran
செப் 13, 2024 05:37

இந்தியாவின் பங்குச்சந்தையை எப்படியாவது முடக்கினால் இந்தியாவுக்கும் அதன் பொருளாதாரத்துக்கு தாக்கம் வரும் என்பதால் வெகுவாக திட்டமிட்டு வின்சி முதற்கொண்டு பல நிபுணர்களை களமிறக்கி இருக்கிறது சோரோஸ் கூட்டம். பணமிருப்பதால் யாரை வேண்டுமானாலும் பொய் சொல்லச் சொல்லுவார்கள். உக்ரைன் ரஷ்ய போர் நின்றால் இவர்களுக்கு பேரிடி - ஆயுதம் விற்க வாய்ப்பில்லை. கூடுதலாக அமெரிக்க பொருளாதாரம் வேறு மீளாது என்று பயத்தில் இருக்கிறார்கள்.


rajan
செப் 13, 2024 08:47

பணமிருப்பதால் யாரை வேண்டுமானாலும் பொய் சொல்லச் சொல்லுவார்கள் மோடி ஆட்சியில் நடப்பது இதுதான் அமலாக்கத்துறை போன்ற அடிமை துறைகள் செய்வது இதுதான் யாரையாவது பொய் சொல்ல வைத்து அதன் அடிப்படையில் கைது வழக்கு என்ற தொடர்கதை எதிர் கட்சிகளுக்கு மட்டும் - பிரிஜ் பூஷன் சிங் போன்றவர்களுக்கு கிடையாது


முக்கிய வீடியோ