உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்க உதவும் மோப்ப எலிகள்

கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்க உதவும் மோப்ப எலிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சியம் ரியப்: மோப்ப நாய்களை போல் ஆப்ரிக்க பெரிய எலிகளை பயன்படுத்தி, நிலத்தில் மறைந்துள்ள கண்ணிவெடிகளை கண்டு பிடித்து அழிக்கும் பணியில், கம்போடிய அரசு ஈடுபட்டு வருகிறது.தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், கடந்த 1990ம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நிலவியது. அப்போது நாடு முழுதும் உள்ள 25 மாகாணங்களில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன.இதை தவறுதலாக மிதித்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இவற்றை கண்டறிந்து அழிக்கும் பணி கடந்த 1992ல் துவங்கியது. இதுவரை 11 லட்சம் கண்ணிவெடிகள் மற்றும் 29 லட்சம் பிற வெடிகுண்டுகள் அகற்றப்பட்டுள்ளன.இன்னும் 1,970 சதுர கி.மீ., பரப்பில் இந்த கண்ணிவெடிகள் புதைந்துள்ளதாக அந்நாட்டின் கண்ணிவெடி கண்டறிதல் மற்றும் பாதிக்கப்பட்டோர் உதவி ஆணையம் கூறியுள்ளது.முன்னர் கண்ணிவெடிகளை கண்டுபிடித்து மோப்ப நாய் உதவியை இந்தக் குழுவினர் பயன்படுத்தினர். சமீப காலமாக ஆப்ரிக்க பெரிய எலிகளை இந்த பணிக்கு பயன்படுத்துகின்றனர்.இந்த எலிகள் 1.5 அடி நீளமும், 1.5 கிலோ எடை வரையும் வளரும். மிகவும் புத்தி கூர்மையுடையவை. இதை பயிற்றுவிக்க முடியும். கண்ணிவெடிகள் மட்டுமின்றி, காசநோய் போன்ற தொற்றுநோய்களை இந்த எலி வகைகளால் துல்லியமாக கண்டறிய முடியும்.கண்ணிவெடிகளை கண்டறிய பயிற்றுவித்து, கம்போடிய ராணுவம் பயன்படுத்தி வருகிறது.நாய்களை போல் கழுத்துப்பட்டை மாட்டி, கண்ணிவெடிகள் புதைந்துள்ள பகுதிகளுக்கு இந்த எலிகளை அழைத்துச் செல்கின்றனர். கண்ணிவெடியை கண்டுபிடித்த உடன் இந்த எலிகள் அங்கிருந்து வேகமாக ஓடுகின்றன.இந்த குறிப்பை வைத்து, அங்கு உள்ள கண்ணிவெடி அகற்றப்படுகிறது. இதுவரை இவை ஒரு கண்ணிவெடிகளை கூட தவறவிட்டதில்லை என, இவற்றை கையாள்வோர் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Iyer
ஜூலை 17, 2025 04:14

• மனிதனைவிட மிருகங்கள் அதிக புத்தி கூர்மை உடையவையாகும். • சுனாமி வந்தபோது - கடலோரங்களில் உள்ள - கட்டிப்போடாத மிருகங்கள் எதுவும் சாகவில்லை. சுனாமி வரும்முன்னே அறிந்து கொண்டு ஓடிவிட்டன. அதே போல் சுனாமி FALSE ALARM கொடுத்தபோது எந்த மிருகமும் பயந்து ஓடவில்லை. புத்திகெட்ட மனிதன் தான் பயந்து ஓடினான்


rama adhavan
ஜூலை 17, 2025 03:48

இந்த எலிகள் நமது அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தை கண்டு பிடிக்கப் பழக்கலாம்.


Kasimani Baskaran
ஜூலை 17, 2025 03:35

போல்போட் என்ற ஒரு கம்முனிச தீவிரவாதி அந்த நாட்டையே சித்திரவதை செய்து பல மில்லியன் அப்பாவிகளை கொன்று குவித்து விட்டு ஆடிய ஆட்டத்தின் இறுதியில் கண்ணிவெடிகளை புதைத்து விட்டு போய் சேர்ந்து விட்டான். பாவப்பட்ட மக்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.


சமீபத்திய செய்தி