வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஏற்கனவே சில நாட்களில் செல்லக்கூடிய தொழில் நுணுக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த ரகசியத்தை கண்டு பிடித்து விட்டாரா என்று விசாரிக்க வேண்டும்.
வாஷிங்டன்: வரும் 2026ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.மனிதர்களை விண்வெளி சுற்றுலா அனுப்புவதற்கும், செவ்வாய் கிரகத்தில் என்ன உள்ளது என்பதை ஆய்வு செய்வதற்கும் எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவது குறித்து மஸ்க் சமூகவலைதளத்தில் பதிவிடுவார்.2026க்குள்..!
இந்நிலையில், இன்று(செப் 08) எலான் மஸ்க் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வரும் 2026ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும். செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குவதற்கான நம்பகத்தன்மையை சோதிக்க, இவை பணியாளர்கள் இல்லாமல் இருக்கும். ஏழு ஆண்டுகளுக்குள் முதல் நபர் செவ்வாய் கிரகத்தில் கால் பதிப்பார். 20 ஆண்டுகளில் நகரம்!
செவ்வாய் கிரகத்தில் 20 ஆண்டுகளில் அங்கு ஒரு நகரம் அமைக்கப்படலாம். 20 ஆண்டுகளில் தன்னிறைவு நகரத்தை உருவாக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். வீரர்கள் யாரும் இல்லாத ( uncrewed starship) விண்கலம் ஐந்து ஆண்டுகளுக்குள் உருவாக்கப்படும். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் முதல் முறையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை உருவாக்கியது. இது பொருளாதார ரீதியாகவும் சாத்தியமானதாக மாறியது. இவ்வாறு அவர் கூறினார்.மஸ்க் நம்பிக்கை
மக்களையும், பொருட்களையும் அனுப்பும் திறன் கொண்ட ஒரு பெரிய, பல்நோக்கு அடுத்த தலைமுறை விண்கலத்தை உற்பத்தி செய்யும் தனது இலக்கை நிறைவேற்ற ஸ்டார்ஷிப்பை எலான் மஸ்க் நம்புகிறார் என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.
ஏற்கனவே சில நாட்களில் செல்லக்கூடிய தொழில் நுணுக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த ரகசியத்தை கண்டு பிடித்து விட்டாரா என்று விசாரிக்க வேண்டும்.