உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப்!

வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெக்சாஸ்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 7வது ராக்கெட் சோதனை முயற்சியில் ஸ்டார்ஷிப் வெடித்து சிதறியது விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3oz2s28c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனையை செய்து அசத்தி வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜன.,16) 7வது முறையாக அந்த ராக்கெட் சோதிக்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. சற்று நேரத்துக்கு பிறகு ராக்கெட் இரண்டாக பிரிந்து பூஸ்டர் பகுதி பூமியை நோக்கி செங்குத்தாக கீழே இறங்க தொடங்கியது. ஆனால், அதன் பிறகு, 8.5 நிமிடங்களில் ஸ்டார்ஷிப்பின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அது கரீபியன் கடல் பகுதியில் வெடித்து சிதறி விழுந்தது. இது ஸ்பேஸ் எக்ஸ் விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இதுபோன்ற சோதனையின் மூலம் நாம் கற்றுக் கொள்வதில் இருந்து வெற்றி கிடைக்கும். மேலும் இன்று ஸ்டார்ஷிப் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க இந்த பூஸ்டர் நமக்கு உதவிகரமாக இருக்கும்,' என தெரிவித்துள்ளது. ஸ்டார்ஷிப் வெடித்து சிதறியது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு மேலாளர் டான் ஹூட் கூறுகையில், 'அனைத்து தரவுகளையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். எங்கு தவறு நடந்துள்ளது என்பதை கண்டறிய சிறிது காலம் எடுக்கும்', எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஆரூர் ரங்
ஜன 17, 2025 16:48

அடுத்த ட்ரிப்பில் வைகுண்டம் போகலாமே?.


அப்பாவி
ஜன 17, 2025 13:22

நல்லவேளை. பைடன் போய் பாக்குறேன்னு உக்காரலை. உடைந்து சிதறியதும் மஸ்க்கை கட்டிக்கிட்டு அழலை.


Rajappa
ஜன 17, 2025 16:19

ஆமா உடனே மோடியை கூம்ப வந்திடு உ பி ....


Mani . V
ஜன 17, 2025 13:00

இதை நம்பி பல லட்சம் பேர் விண்வெளிப் பயணம் செல்ல பணம் கட்டி பதிவு செய்துள்ளார்கள். கோவிந்தா,கோவிந்தா.


Senthil Kumar S
ஜன 17, 2025 10:38

எலான் மஸ்க்கை மீசையில் மண் ஒட்டாமல் விட மாட்டீங்களா??


Ramesh Sargam
ஜன 17, 2025 09:56

தவறுகளை கண்டறிய, திருத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை அணுகவும். நன்றி. ஜெய் ஹிந்த்.


Kundalakesi
ஜன 17, 2025 12:13

அவர்கள் 50 வருடங்கள் முன்னோக்கி உள்ளனர்


Kasimani Baskaran
ஜன 17, 2025 08:50

சோகம்... இதுகளை நம்பி செவாய்க்கு போகப்போகிறேன் என்று நிற்பவர்கள் பாவம்...


தமிழன்
ஜன 17, 2025 08:39

எலன் மஸ்க்கின் காரைப் போலவே எல்லாமே டமார் ஆகுது


vijay
ஜன 17, 2025 10:24

எலான் மஸ்கின் காரில் குண்டு வைத்து வெடிக்க வைத்ததாக செய்தியில் பார்த்தது நியாபகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை