உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஸ்பெயினில் பேய் மழைக்கு 217 பேர் பலி; பார்வையிட வந்த மன்னர் மீது சேற்றை வீசி மக்கள் ஆவேசம்!

ஸ்பெயினில் பேய் மழைக்கு 217 பேர் பலி; பார்வையிட வந்த மன்னர் மீது சேற்றை வீசி மக்கள் ஆவேசம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலன்சியா: ஸ்பெயின் நாட்டில் கொட்டித் தீர்த்த மழைக்கு 217 பேர் பலியாகி இருக்கும் சூழலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற மன்னர் மீது சேற்றை வாரியிறைத்து மக்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். ஐரோப்பிய நாடான ஸ்பெயின், 5 நாட்களாக பெய்த வரலாறு காணாத மழையில் தத்தளித்து வருகிறது. குறிப்பாக வேலன்சியா மாகாணம் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. அங்கு மட்டும் 217 பேர் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்க நினைத்து பார்க்க முடியாத இயற்கை சீற்றத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ldxyjedx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காஸ்டில்லா லா மஞ்ச்சா, அன்டாலுசியா ஆகிய மாகாணங்களை காட்டிலும் வேலன்சியா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் வீடுகள், உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு நிர்வாகம் எந்த மீட்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் பெருத்த சேதாரத்துக்கு உள்ளான வேலன்சியா மாகாணத்தில் உள்ள பைபோர்ட்டா நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மன்னர் பிலிப், ராணி லெட்டிசியாவுடன் சென்றார். அவர்களின் வருகைக்கு சேறும், சகதியுமாக இருந்த சாலைகள் சமன்படுத்தப்பட்டு இருந்தன.பாதுகாவலர்கள் புடைசூழ மன்னர் பிலிப், ராணியுடன் வந்த போது பாதிக்கப்பட்ட மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இருவரின் வருகையைக் கண்டு ஆத்திரம் அடைந்த அவர்கள், எதிர்ப்பு முழக்கமிட்டனர். ஆனாலும் பாதுகாவலர்களுடன் மன்னரும், ராணியும் வீதிகளில் நடந்து வர, அதிருப்தி அடைந்த மக்கள், திரும்பி போகுமாறு முழக்கமிட்டபடியே கீழே கிடந்த சேற்றை எடுத்து அவர்கள் மீது வீசினர். நொடிப் பொழுதில் இந்த சம்பவத்தால் மன்னர் பிலிப், முகம் மற்றும் ஆடைகள் சேறாகின.என்ன நடக்கிறது என்பதை கண்டு அதிர்ந்த பாதுகாவலர்கள் அவரை மேலும் முன்னேறவிடாமல் அரணாக காக்க, அவர்களை விலக்கிக் கொண்டே மக்களை மன்னர் பிலிப் அணுகினார். எதிர்ப்பை மீறி வந்த மன்னரை கண்டு ஆத்திரத்தின் உச்சிக்கே போன மக்கள், அவரை கடுமையாக திட்டித் தீர்த்தனர். அவர்களை சமாதானப்படுத்திய மன்னர் பிலிப், மெதுவாக அங்கிருந்து தமது பாதுகாவலர்களுடன் நடந்து சென்றார். மன்னர் மீது சேற்றை வாரியிறைத்த மக்களின் ஆத்திரம், அந்நாட்டில் பரபரப்பான விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

vee srikanth
நவ 04, 2024 18:12

அதுவும், மேடான இடத்தில் இருந்து அல்லது ஹெலிகாப்டர் ல் சென்று போட்டோ அனுப்புவார்கள்


S.L.Narasimman
நவ 04, 2024 12:22

வெள்ள துயரில் மக்கள் ஆளுபவர்கள் மேல் சேற்றை வீசி எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். இங்கே அஞ்சுக்கும் பத்துக்கும் பாட்டில் பிரியாணிக்கும் அசமந்தமாய் திரிகிறார்கள்.


narayanansagmailcom
நவ 04, 2024 11:48

நம் நாட்டில் இப்படி உடனே வர மாட்டார்கள். குறைந்தது பத்து நாட்கள் கழித்து எல்லாம் நார்மல் ஆன பிறகு தான் வருவார்கள்


S Sivakumar
நவ 04, 2024 11:46

மன்னர் தன் கடமையை உணர்ந்து கோபம் அடையாமல் மக்களின் குறைகளை கேட்டு அறிந்து கொள்ளும் முறை தனித்துவமான அணுகுமுறை. வாழ்த்துக்கள் ?


S Regurathi Pandian
நவ 04, 2024 11:35

மக்களாட்சி காலத்தில் மன்னர்கள் எதற்கு? அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களை கண்டுகொள்ளாவிட்டால் மக்களின் எதிர்வினை தொடக்கத்தில் இப்படித்தான் இருக்கும்


Premanathan Sambandam
நவ 04, 2024 11:21

சரியான எதிர்ப்பு நம் நாட்டில் இப்படி நடக்காது


A Viswanathan
நவ 04, 2024 16:12

இவர்கள் எத்தனை நாட்டின் மீது படையெடுத்து அங்குள்ள பழங்குடிமக்களை ஈவு இரக்கமின்றி கொன்று பல பழங்குடி மக்களை வேரோடு அழித்துக் கொன்றவர்கள். அதற்கான தண்டனையை கடவுள் கொடுக்கிறார்


A Viswanathan
நவ 04, 2024 16:12

இவர்கள் எத்தனை நாட்டின் மீது படையெடுத்து அங்குள்ள பழங்குடிமக்களை ஈவு இரக்கமின்றி கொன்று பல பழங்குடி மக்களை வேரோடு அழித்துக் கொன்றவர்கள். அதற்கான தண்டனையை கடவுள் கொடுக்கிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை