உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவின் அதிருப்தி எதிரொலி: பாக். உடனான கடற்படை பயிற்சி திட்டத்தை ரத்து செய்த இலங்கை

இந்தியாவின் அதிருப்தி எதிரொலி: பாக். உடனான கடற்படை பயிற்சி திட்டத்தை ரத்து செய்த இலங்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: இந்தியாவின் அழுத்தமான அதிருப்தியை தொடர்ந்து, பாகிஸ்தானுடன் நடத்த இருந்த கடற்படை பயிற்சியை இலங்கை ரத்து செய்துள்ளது.திரிகோணமலை கடற்பகுதியில் இலங்கை பாகிஸ்தான் நாடுகள் இடையே கடற்படைகள் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு தொடர்பான தமது கவலைகளையும், அதிருப்தியையும் இந்தியா தெரிவித்து இருந்தது.இதையடுத்து, இலங்கை, பாக்., படைகள் மேற்கொள்ள இருந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பி.டி.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.இலங்கை வடகிழக்கு கடலோர பகுதியாக திரிகோணமலை, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு நலன்களுக்கு முக்கிய மையமாக கருதப்படுகிறது. பிரதமர் மோடியின் சமீபத்திய இலங்கை பயணத்தின் போது திரிகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Chandrasekaran NS
ஏப் 19, 2025 20:55

பூகோள ரீதியாக மட்டுமன்றி இருநாட்டு மக்களின் உணர்வுகளை, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியம் என்பதால் தான் பாரத தேசத்தின் அதிருப்தியை தொடர்ந்து இலங்கையின் ரத்து நடவடிக்கை...வரவேற்கப்பட வேண்டும்


Sampath Kumar
ஏப் 19, 2025 16:25

பஜ்ஜி இக்கல்லை எனிடல் சீனா என்று அவன் ஸ்டாண்டை மாற்றி விடுவான் சிங்களன் உங்க அ திருப்தி எல்லாம் ஏடு படாது


Barakat Ali
ஏப் 19, 2025 12:59

இலங்கையுடனான உறவில் தவறான கொள்கைகளைக் கொண்டிருந்த திமுக மற்றும் அதன் அடிமைகளுக்கு இதை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை ... எந்த ஒரு நாடும் தனது அயலக உறவுகளை பிற நாட்டுக்காக மாற்றிக்கொள்ள அவசியமில்லை என்றாலும் சீனாவை விட இந்தியாதான் இலங்கைக்கு அதிக பயனுள்ள நாடு ..... தாமதமாகவேனும் இதை இலங்கை உணர்ந்துள்ளது .....


Barakat Ali
ஏப் 19, 2025 13:12

பாகிஸ்தானை விட இந்தியாதான் .... இதுவே சரி ...


Yasararafath
ஏப் 19, 2025 10:35

இது பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை உள்ள பிரச்சனை.


vivek
ஏப் 19, 2025 11:25

ஏல பக்கத்து வீட்டு காரன் உன் வீட்டில் நுழைந்து போனால் வேடிக்கை பார்பாயா அறிவிலி


Kumar Kumzi
ஏப் 19, 2025 11:52

பார்ர்ரா கோவம் வருது ஹாஹாஹா


Rajah
ஏப் 19, 2025 12:56

நடப்பது பாஜக ஆட்சி. இந்தியாவின் பாத்துகாப்பில் அக்கறை உள்ள கட்சி. இது இலங்கை, இந்தியாவின் பிரச்சனை என்று சொல்வதற்கு புள்ளிக் கூட்டணி போல் தேசப்பற்று அற்ற கட்சி அல்ல. திருகோணமலையில் பாகிஸ்தானியர்கள் ஊடுருவது தமிழக திராவிடர்களுக்கு நன்மை அளிக்கலாம். ஆனால் அது இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல். முதலில் தேசத்தை நேசியுங்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 19, 2025 14:55

யாச்சரு ........ ஒருவேளை, பாக் கடற்படை இலங்கைக் கடல் எல்லையை பயன்படுத்தும் உரிமை பெற்றால் தமிழகத்துக்குத்தான் ஆபத்து ..... அவங்க விவகாரம் ன்னு உட்டுட்டு முடியுமா ??


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 19, 2025 16:17

யாசர் அவர்களே.... அவர்கள் விவகாரம் என்றால் பாதிப்பு நமக்குத்தான்....இன்று கூட்டு பயிற்சி என்று அனுமதித்தால் நாளை கடல் எல்லைகளை பகிர்ந்து கொள்ள கேட்பார்கள் பின்பு பாகிஸ்தானின் குடிசை தொழிலான போதை பொருட்களை சுலபமாக தமிழ்நாட்டில் கடத்துவார்கள்... அதற்கேற்றாற்போல் இந்த அரசும் உள்ளது.... ஆகையால் இதை அடுத்த நாட்டின் பிரச்சினை என்று தள்ளி விடமுடியாது....!!!


M L SRINIVASAN
ஏப் 19, 2025 10:27

தங்கள் பேரை பார்த்ததுமே தாங்கள் யார் என்பது தெரிகிறது . இது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம் . மத சம்பந்தப்பட்டது அல்ல /


thehindu
ஏப் 19, 2025 08:53

அது அவர்களின் உரிமை. உருட்டல் மிரட்டல் பேர்வழிகளை கொண்டது இந்துமதவாத அரசு .


vivek
ஏப் 19, 2025 10:13

இந்தியாவை காக்க அப்படி தான் இருப்போம் 200 ரூபாய் கொத்தடிமை


N Sasikumar Yadhav
ஏப் 19, 2025 10:26

பாகிஸ்தான் பயங்கரவாத இசுலாமிய மதவெRY பாசம் கொண்ட உங்களுக்கு பாரதத்தில் சொகுசாக வசிக்க கொஞ்சங்கூட தகுதியில்லை


Anand
ஏப் 19, 2025 10:52

போலி பெயரில் உலாவும் அந்நிய எச்சம்...