உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது!

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: லண்டன் பயண நிதி முறைகேடு வழக்கில், இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இன்று கைது செய்யப்பட்டார். இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, 76. அந்த நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்தவர். பல்லாண்டு காலம் அந்த நாட்டு அரசியலில் இருக்கிறார். இலங்கை பொருளாதார ரீதியாக திவால் நிலையை எட்டியபோது, அதிபராக பொறுப்பேற்று மீண்டும் நிலைமையை சீர்படுத்தியவர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ayd5shhn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர், அதிபராக இருந்தபோது செப்டம்பர் மாதம் 2023ம் ஆண்டு லண்டன் பயணம் மேற்கொண்டார். அவரது மனைவி மைத்ரி, லண்டன் பல்கலையில் பட்டம் பெற்றதை முன்னிட்டு இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில், ரணில் உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டுள்ளனர். இதற்கென அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தி உள்ளார் என்பது புகார்.இந்த புகார்படி விசாரணைக்கு ஆஜராகும்படி இலங்கை குற்றப்பிரிவு போலீசார், ரணிலுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி இன்று காலை ஆஜரான ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Senthoora
ஆக 27, 2025 07:20

இவருக்காக சசி தரூர் வக்காலத்து வாங்குவது ஏனோ?


Senthoora
ஆக 27, 2025 07:18

ரணில் விக்ரமசிங்கேவுக்காக இந்தியாவின் சசி தரூர் கண்ணீர் வடிக்கிறார். ஏன் என்று யாரும் சொல்ல முடியுமா?


Nachiar
ஆக 22, 2025 17:00

பலாமரத்தையும் மரம் இருந்த நிலத்தையும் நிலம் இருந்த ஊரையும் விழுங்கியவன் தேரில் உலா வரும் பொழுது பலா கொட்டயை விழுங்கியவனுக்கு தண்டனையாம்.


Raghavan
ஆக 22, 2025 16:43

இவர் போட்ட பிச்சையில் நீதிபதிகள் யாராவது இருக்கிறார்களா இங்கு உள்ளது போல், அப்படி என்றால் கண்டிப்பாக ஜாமீன் கிடைத்துவிடும். வழக்கும் குறைந்தது ஒரு 10 அல்லது 15 வருடங்கள் இழுத்தடிக்கும் வேண்டுமானால் டெல்லியில் இருந்து கபில் சிபல் போன்றவர்களை இங்குள்ள விடியல் ஆட்சி அமைச்சர் மூலமாகவோ அல்லது பாரதி மூலமாகவோ ஏற்பாடுசெய்வதற்கு முயற்சியுங்கள். அவர்கள் யாவரையும் விலைகொடுத்து வாங்குவதில் கில்லாடிகள். உங்களுக்கு என்றல் வழக்கு செலவை கொஞ்சம் அதிகமாக சொல்லுவார்கள் அவர்களும் கொஞ்சம் காசு பார்க்கவேண்டாமா.


duruvasar
ஆக 22, 2025 14:23

நாங்க எல்லாம் கடப்பாரையை முழுங்கி விட்டு கஷாயம் சாப்பிட்றவங்க. எங்களுக்கு இதெல்லாம் ஜூஜிபி மேட்டரு. . புள்ளங்களை படிக்கவைக்கிற வேலைய பாருங்க.


vadivelu
ஆக 22, 2025 14:34

அங்கே உச்ச நீதி மன்றம் இருக்கா ...


Kanns
ஆக 22, 2025 14:19

உப்பை தின்றவன் தண்ணி குடிக்கணும்.


vadivelu
ஆக 22, 2025 14:35

அவுங்களும் உச்ச நீதி மன்றம் வச்சுருக்காங்க. வயதாயிருச்சு , நடக்க முடியலை என்று சொல்லலாம்


Kumar Kumzi
ஆக 22, 2025 15:37

அங்க ஓவாவுக்கும் ஓசிக்கோட்டருக்கும் ஓட்டு போடுற கொத்தடிமை கூமுட்ட கூட்டம் இல்லை


சமீபத்திய செய்தி