உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குரங்கு செய்த சேட்டை; இருளில் மூழ்கிய இலங்கை

குரங்கு செய்த சேட்டை; இருளில் மூழ்கிய இலங்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: இலங்கையில், மின் நிலையத்துக்குள் நுழைந்து குரங்கு செய்த சேட்டையால் நாடு முழுதும் மின் தடை ஏற்பட்டது. நம் அண்டை நாடான இலங்கையில் நேற்று காலை திடீரென மின் தடை ஏற்பட்டது. கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள பானாந்துறை மின் நிலையத்தில் ஏற்பட்ட மின் அழுத்த மாறுபாடு பிரச்னையால் மின் தடை ஏற்பட்டதாக இலங்கை மின் வாரியம் அறிவித்தது. சில நிமிடங்களில் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால், ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக மின்சாரம் வராததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மருத்துவமனைகளிலும் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். குடிநீர் சப்ளையும் இல்லாததால் குடிக்க நீரின்றி பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் குமர ஜெயக்கொடி கூறியதாவது: கொழும்பு புறநகர் பகுதியான பானாந்துறை மின் சப்ளை நிலையத்தில் ஏற்பட்ட மின் அழுத்த பிரச்னையால், நாடு முழுதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. விரைவில் சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும். மின் தடைக்கு பானாந்துறை தேசிய மின் சப்ளை நிலையத்தில் புகுந்து குரங்கு செய்த சேட்டையே காரணம். பணியாளர்கள் தீவிர முயற்சியால் சில மணி நேரங்களில் கோளாறு சரி செய்யப்பட்டு, மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மின் சப்ளை செய்யப்பட்டது. தொடர்ந்து பிற இடங்களிலும் மின்சப்ளை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Anbuselvan
பிப் 10, 2025 12:29

வரலாறு மறுபடியும் பிரதிபலிக்கிறதோ


ஜெகதீஸ்வரன் தண்டபானி
பிப் 10, 2025 10:03

ஜெய் ஆஞ்சநேயா ஜெய் ஸ்ரீ ராம்


அப்பாவி
பிப் 10, 2025 08:41

இங்கே காசை வாங்கிட்டு சீனாவுக்கு சேவை செய்தால் அனுமார் வந்து அடிக்காம?


Senthoora
பிப் 10, 2025 07:20

சாபம்.


D.Ambujavalli
பிப் 10, 2025 05:55

அன்று ஹனுமார் ஊரை எரித்தார், இன்று அவர் வம்சத்தவர் ஊரை இருளடிக்கிறாரா? இலங்கைக்கும் குரங்குக்கும் ஏதோ நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது போலும்


Kasimani Baskaran
பிப் 10, 2025 05:22

தமிழகத்தில் அணில், இலங்கையில் குரங்கு... ஏதாவது ஒன்றின் மீது பழி போட்டு தப்பிப்பது.


Raj
பிப் 10, 2025 05:18

தமிழ்நாட்டில் அணில்.... இலங்கையில் குரங்கு....


J.V. Iyer
பிப் 10, 2025 04:45

பாட்டிலுக்குலுக்கு பத்து ரூவாய் மாடல் அணில் அமைச்சர் பொறாமைப்படும் அளவுக்கு இந்த நிகழ்வு.


கோமாளி
பிப் 10, 2025 04:21

இது எங்களை ஊர் அமைச்சர் அணில் கதை சொன்னது போல உள்ளதே


Senthoora
பிப் 10, 2025 04:18

இது நம்பமுடியாத செயல், இப்போ புதிதாக வந்த ஜனாதிபதி ஊழலை கடுமையாக எதிர்த்து கைது நடவடிக்கையில் இறங்கி, பெரும் புள்ளிகளை கைதுசெய்து விசாரணையில் ஈடுபடுகிறார்கள், 20 வருடமாக மக்களை ஏமாற்றி ராஜவாழ்க்கை வாழ்ந்த ராஜபல்செயும் சகாக்களும் இப்போ மரணபயத்தில் இருகிறார்கள், எப்படியாவது ஆட்சியை கலைக்க முயட்சியில் செய்யும் காரியத்தில் இதுவும் ஒன்று, அரிசி கலஞ்சியத்தில் போதுமான அரசி இருந்து அதை விநியோகம் செய்யாமல் தடுத்து அரசி தட்டுப்பாட்டை எட்படுத்தியது, போதுமான உணவு களஞ்சியத்தில் இருந்தும் பலகாலம் தடுத்து வைத்து இப்போ அது நாசமாப்போனது. இப்படி பல தடைகளை எட்படுத்துவது ராஜபக்ஷே கூட்டம். அதிகாரிகள் திருந்துங்க இல்லையேல் இராணுவம் விநியோகத்தை செய்யும் என்று இப்போ அதிபர் சொல்லியிருக்கிறார்.


முக்கிய வீடியோ