உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இலங்கையில் அமைச்சர்களுக்கான சலுகைகள் அதிரடியாக குறைப்பு

இலங்கையில் அமைச்சர்களுக்கான சலுகைகள் அதிரடியாக குறைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: நம் அண்டை நாடான இலங்கையில், அதிபர் அனுரா குமார திசநாயகே தலைமையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்சே, அதிபர், பிரதமர் போன்ற பதவிகளை ஏற்கனவே வகித்து வந்தார். கொழும்பு அரசு இல்லத்தில் அவர் வசித்து வரும் நிலையில், அதை காலி செய்யும்படியும், இல்லையெனில் வாடகை செலுத்தும்படியும், அவருக்கு இலங்கை அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.இந்நிலையில், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே நேற்று வெளியிட்ட அறிக்கை:கேபினட் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்கு, அரசு சார்பில் இரு வாகனங்கள் மட்டுமே வழங்கப்படும். கேபினட் அமைச்சருக்கான ஊழியர்கள் 15 ஆகவும், துணை அமைச்சருக்கான ஊழியர்கள் 12 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளன. தனி செயலர், ஊடக செயலர் அல்லது மக்கள் தொடர்பு செயலர் போன்ற பதவிகளில், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களை நியமிக்கக் கூடாது. அரசின் செலவுகளை குறைப்பதே இந்த கட்டுப்பாடுகளின் நோக்கம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ganesh Pillai
ஜன 26, 2025 11:07

I appreciate our Govt of Sri Lanka decisions were voted for tems changes former president Mahinda Rajapaksa living 4.6 million rent House as well wasted our taxe and loan money finally Sri Lanka became bankrupt. We thanks Modiji Govt support for us difficult situations Happy Republic day of Bharat Jai Hind


Barakat Ali
ஜன 26, 2025 01:32

இந்தியாவிலும் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரங்கள் சலுகைகள் குறைக்கப்பட வேண்டும் ..... கவர்னரின் கீழ் சட்டம் ஒழுங்காவது வரவேண்டும் ....


நிக்கோல்தாம்சன்
ஜன 26, 2025 05:23

வரவேற்கிறேன்


சமீபத்திய செய்தி