உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு ஸ்டாலின் விசிட்: தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு ஸ்டாலின் விசிட்: தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு

வாஷிங்டன்: கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.அமெரிக்காவில் உள்ள ஆப்பிள், கூகுள் , மைக்ரோசாப்ட் நிறுவனங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அவர், முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j733m5sb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆசியாவில் தொழில் வளர்ச்சி மையமாக தமிழகத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தின் முதலீடு செய்யுமாறு கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தேன். தமிழகத்தை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம்' என பதிவிட்டுள்ளார்.

சென்னையில் ஏ.ஐ., ஆய்வகம்

சென்னையில் செயற்கை ஏ.ஐ., ஆய்வகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Senthil Kumar
செப் 02, 2024 22:40

சவுக்கு உள்ளே இருக்கும்வரை உங்களை யாரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள், ஆனால் மக்களுக்கு தெரியும் யார் ஏமாளி யார் கோமாளி என்று.


வல்லவன்
ஆக 31, 2024 21:01

மோடி அங்கு போனபோது ஏன் இவ்வளவு கூவல் வரவில்லை


Sathyanarayanan Sathyasekaren
செப் 05, 2024 02:59

இது கூட தெரியாத அறிவாளியா நீ? அது சரி, கொத்தடிமைக்கு அறிவு எங்கே இருக்க போகுது.


Barakat Ali
ஆக 31, 2024 20:14

முதல்வரின் அமெரிக்க பயணத்தின் ரிசல்ட் ????LMAO. 1000 கோடி கூட இல்லை. அதற்காக அவர் அமெரிக்கா சென்றாரா? மேலும் பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்கனவே TN இல் தங்கள் கடைகளை வைத்துள்ளன. அவர்களைச் சந்திக்க அவர் அமெரிக்காவிற்குப் பறக்க வேண்டிய அவசியமில்லை. அவர் செய்திருக்க வேண்டியதெல்லாம், தொலைபேசியை எடுத்து, அவர்களின் CEO களை அழைத்து, அவர்களின் முதலீடுகளை அதிகரிக்கக் கோருவதுதான். பாதுகாப்பு, மருந்து, எரிசக்தி மற்றும் இன்னும் தமிழ்நாட்டில் முதலீடு செய்யாத உயர் தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் உள்ள நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்தித்திருக்க வேண்டும். உதாரணமாக பயணிகள் மற்றும் போர் விமான இயந்திர உற்பத்தியாளர் பிராட் & விட்னி .... . TN திறமைகள் நிறைந்த ஒரு குழுவைக் கொண்டுள்ளது மற்றும் முதல்வர் அதை சந்தைப்படுத்தி, மாநிலத்தின் வணிக சாதகமான சூழலை முன்னிலைப்படுத்த வேண்டும் மற்றும் குறைந்தது 20-30 ஆயிரம் கோடிகளை ஈர்த்திருக்க வேண்டும் ....... ஒரு கர்நாடகா அல்லது ஆந்திர முதல்வர் அமெரிக்கா சென்றால், அவர்கள் அதைச் செய்திருப்பார்கள்.


senthu
ஆக 31, 2024 18:15

anyone can go there (open for public visit) ?? Nalla otturanga


venugopal s
ஆக 31, 2024 18:13

சரி சரி, பஞ்சாயத்து முடிஞ்சது, எல்லா சங்கிகளும் போய் ஜெலூசில் வாங்கி குடித்து விட்டு குப்புறப் படுத்து தூங்குங்கள்! நாளைக்கு இதைவிட அதிகமாக புலம்ப வேண்டியிருக்கும்!


Yuvaraj
ஆக 31, 2024 16:26

கைப்புள்ள


ராமகிருஷ்ணன்
ஆக 31, 2024 15:11

அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் தெளிவான வீடீயோ ஒரே ஒரு வீடீயோ போடுங்க பார்ப்போம். முயற்சி செய்ங்க.


Sridhar
ஆக 31, 2024 12:35

வேண்டுகோள் வைப்பதை இங்கிருந்தே வச்சிருக்கலாமே? அட குறைந்த பட்சம் நம்ம தமிழ்நாட்டோட பாரம்பரிய உடையில ஒரு வேஷ்டி சட்டை போட்டுக்கிட்டு போயிருக்கலாமே? மக்கள் பணத்துல போயிருக்கறதுனால, தினமும் ஒவ்வொரு மணிநேரமும் என்ன செஞ்சிகிட்டு இருக்காருன்னு தெளிவா அப்பப்போ சொல்லணும். செய்வார்களா? ரெண்டு நாளுக்கப்புறம் காணாமப்போயிருவாரு பாருங்க.


theruvasagan
ஆக 31, 2024 12:30

ஆப்பிள் தலைமையகத்தில் ஒருத்தர் கூட அங்க.ஆப்பிள் வியாபாரம் டஜன் கணக்குலயா இல்ல கிலோ கணக்குலயா என்கிற விவரத்தை சொல்லலையாமே.


Anand
ஆக 31, 2024 13:07

ஒரு சாம்பிள் கூட கொடுக்கலையாமே.


ஆரூர் ரங்
ஆக 31, 2024 12:29

நாதெள்ளாவைப் பார்த்திருந்தால் நகை விலையை விசாரித்து வந்திருப்பார். அப்பாயின்மென்ட் கிடைக்கலொயோ?


முக்கிய வீடியோ