உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சூடான டீ கொட்டியதற்கு ரூ.435 கோடி இழப்பீடு: ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதிர்ச்சி

சூடான டீ கொட்டியதற்கு ரூ.435 கோடி இழப்பீடு: ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதிர்ச்சி

கலிபோர்னியா : 'ஸ்டார்பக்ஸ்' நிறுவனத்தின் டெலிவரி கவுன்டரில் வழங்கிய சூடான டீ கொட்டியதில், இடுப்பு பகுதியில் காயமடைந்தவருக்கு, 435 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள ஸ்டார்பக்ஸ் என்ற, உலகம் முழுவதும் பரவியுள்ள பிரபலமான காபி நிறுவனத்தில், மைக்கேல் கார்சியா என்ற டெலிவரி டிரைவர் டீ வாங்கினார். அந்த டீயை அவர் வாங்கிய போது, அங்கிருந்த ஊழியர் கன்டெய்னர் மூடியை சரியாக மூடாமல் கொடுத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r68ubpwt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதை அறியாமல் வாங்கிய கார்சியாவின் இடுப்பு பகுதியில் சூடான டீ கொட்டியது. இதில், அவரின் இடுப்பு பகுதியில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டது.அதற்கு இழப்பீடு கேட்டு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மீது அவர் வழக்கு தொடர்ந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அந்த வழக்கை விசாரித்து, 435 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.அதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ள ஸ்டார்பக்ஸ் நிறுவனம், 'சாதாரண காயத்திற்கு, 435 கோடி ரூபாய் இழப்பீடா...' என கூறி, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

naranam
மார் 19, 2025 20:59

சூடான டீ உடலின் எந்த பகுதியில் கொட்டியது என்பது தான் முக்கியம். அதனால் அவருக்கு ஏற்பட்ட இழப்பு வலி ஆகியவற்றிற்கு தான் இந்த நஷ்ட ஈடு என்று படித்ததாக நினைவு.


Ramesh Sargam
மார் 19, 2025 20:29

அந்த இழப்பீடு கிடைத்தால், பாதிக்கப்பட்டவர் அவரே ஒரு டீ விற்கும் நிறுவனம் அமைக்கலாம். ஆனால் ஸ்டார்பக்ஸ் மாதிரி அதிக விலைக்கு விற்காமல், எல்லோரும் வாங்கி குடிக்கும் அளவுக்கு விலை இருக்கவேண்டும்.


Balasubramanian
மார் 19, 2025 16:30

இந்த நிறுவனத்தின் காபி டீ விலையை கேட்டாலே வயிற்றில் எரிச்சல் உண்டாகும்! அதற்கு என்ன இழப்பீடு?


Karthik
மார் 19, 2025 19:04

அதனாலதான் அந்த நிறுவனத்திற்கு 435 கோடி அபராதம். விலை குறைவா இருந்திருந்தா அபராதமும் குறைவா இருந்திருக்கும் அல்லவா?


மாலதி ,கோவை
மார் 19, 2025 08:38

ஏன்னா அது ஒரு இந்திய நிறுவனம். அப்படி தான் தீர்ப்பு சொல்லுவாங்க


karthik
மார் 19, 2025 09:56

கொஞ்சமாவது பொதுஅறிவை வளர்த்துக்கொண்டு கருத்து சொல்லுங்க


சமீபத்திய செய்தி