உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சூடான் ட்ரோன் தாக்குதல்கள் நிவாரண முகாமில் 60 பேர் பலி

சூடான் ட்ரோன் தாக்குதல்கள் நிவாரண முகாமில் 60 பேர் பலி

கார்துாம்: ஆப்ரிக்க நாடான சூடானில், அல் புர்ஹான் தலைமையிலான ராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப்., என்ற துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த, 2023 ஏப்ரல் முதல் கடும் சண்டை நடந்து வருகிறது. குறிப்பாக டார்பர் மாகாணத் தலைநகரான அல் பாஷிர் நகரை மையப்படுத்தியே தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அல் பாஷிரில் உள்ள இடம் பெயர்ந்தோருக்கான நிவாரண முகாமில் ஆர்.எஸ்.எப்., படையினர் நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இதில் அங்கு செயல்பாட்டில் இருந்த கடைசி மருத்துவமனையும், அருகிலுள்ள மசூதியும் தகர்க்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ