உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது: நாள் குறித்தது நாசா

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது: நாள் குறித்தது நாசா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் ஆகியோர் எப்போது பூமிக்கு திரும்புவார்கள் என்ற தகவலை நாசா வெளியிட்டு உள்ளது.கடந்த ஆண்டு விண்வெளியில் ஆய்வுப் பணிக்கு நாசா விஞ்ஞானிகள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் ஆகியோர் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் ராக்கெட்டில் சென்றனர். 10 நாட்கள் மட்டும் விண்வெளியில் தங்கியிருக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவ்கள் விண்வெளி மையத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனால், அவர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் பூமிககு திரும்புவார்கள் என நாசா கூறியிருந்தது. இதன் இடையே, அவர்களின் உடல்நிலை குறித்து வதந்திகள் கிளம்பின. ஆனால், அதனை சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோர் மறுத்தனர். விண்வெளியிலேயே கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுவும் விவாதப் பொருளானது.இந்நிலையில், ' சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் ராக்கெட்டை அனுப்ப உள்ளது', என நாசா அறிவித்துள்ளது.இதன் மூலம் அவர்கள் மார்ச் மாத மத்தியிலேயே பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 12ம் தேதி இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சிந்தனை
பிப் 13, 2025 14:48

வெள்ளைக்காரன் எதை சொன்னாலும் கேள்வி கேட்காமல் நம்புறதுக்கு muட்டாlகl நாங்க இருக்கோம் நீங்க சும்மா சொல்லிக்கிட்டே இருங்க


Paramasivam. Y
பிப் 13, 2025 09:00

அமெரிக்காவுக்கே பெரிய சவாலாக அமைந்து விட்டது சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் விண்வெளி பயணம்.


Anantharaman Srinivasan
பிப் 12, 2025 22:48

Man Proposal God Disposal.. பாத்திரமாக திரும்ப வேண்டுமென்பது தான் அனைவரின் விருப்பம். ஆனால் இனி தப்பபித்தவறி கூட இவர்கள் இருவரும் ராக்கெட்டில் செல்ல விரும்ப மாட்டார்கள்.


Senthoora
பிப் 13, 2025 04:02

என்னமோ வாய் சவாடல் விடுறாரு, கிரீன்லாந்தை, கனடாவை, ஆஸ்திரேலியாவை, காஸாவை வாங்குவேன் என்று, இந்த பொண்னை விண்வெளியில் தவிக்கவிடுறாங்களே. முதலில் தனது நாட்டை, மக்களை பார்க்கணும், பொண்ணுகள் நகைக்கு ஆசைப்படுவதுபோல, அமெரிக்கா எண்ணெய் , தங்கம், இரும்பு கனிமளவளங்களை எடுப்பதுக்கு மற்றைய நாடுகளை அச்சுறுத்தி அந்த நாடுகளை ஆட்டையப்போட்டு அவர்களை ஏழைகளாக மாற்றி, அமெரிக்க வல்லரசாக காட்டிகொள்ளுது. முடிவு ஒருநாள் ஹிட்லரைப்போல தான் வரும்.


subramanian
பிப் 12, 2025 21:23

உண்மையை மூடி மறைக்க முடியாது. கெட்டிக்கார புளுகு எட்டு நாளைக்கு. இந்தியர்களை பயன்படுத்தி கொண்டு, கொன்று விடுவார்கள். வரலாற்றின் பக்கங்களில் உண்மை இருக்கிறது.


Ramesh Sargam
பிப் 12, 2025 21:17

இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகளால் அவர்களை மீட்டெடுக்க முடியுமா?


SANKAR
பிப் 12, 2025 21:42

no .we are not that big Musk can .and it is his space x craft going up now.biden ignored him as he was close ally of Trump


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை