உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்கள் அதிகரிப்பு

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்கள் அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கனடா எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ஆய்வறிக்கை தகவல் தெரிவிக்கிறது.அமெரிக்கா எல்லை பாதுகாப்புத்துறை, சட்ட விரோதமாக நுழையுபவர்கள் குறித்து ஆய்வு நடத்தி உள்ளது. ஆய்வில் வெளியான விபரங்கள் பின்வருமாறு: கனடா எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 5,150 இந்தியர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் இதே காலகட்டத்தில் 47 சதவீதம் சட்டவிரோத நுழைவு அதிகரித்துள்ளது.

1.5% சதவீதம்

அமெரிக்கா- கனடா எல்லையானது உலகின் மிக நீளமான பாதுகாப்பற்ற எல்லையாகும். அமெரிக்க மக்கள் தொகையில், இந்திய அமெரிக்கர்கள் 1.5% உள்ளனர். அனைத்து வருமான வரிகளிலும் 5 முதல் 6 சதவீதம் செலுத்துகின்றனர். அதேபோல், இங்கிலாந்தில் துறைமுகத்தில் தஞ்சம் கோரும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிககரித்துள்ளது. கடந்த 2021ல் 1,170 பேர் குடிபெயர்ந்துள்ளனர். நடப்பாண்டு இதுவரை 475 பேர் புகலிடம் கோரி பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டிரம்ப் சொல்வது என்ன?

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடிபெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜோ பைடன் எந்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். நான் ஆட்சி பிறகு இதற்கு ஒரு நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைப்பேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். அதேநேரத்தில், சட்டவிரோதமாக குடிபெயர்வோர்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. அதிபர் ஜோ பைடன் உன்னிப்பாக கவனித்து வருகிறார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

senthil
செப் 03, 2024 19:54

true


தஞ்சை மன்னர்
செப் 03, 2024 14:22

பாலரும் தேனாறும் ஓடும் குசராத்துக்காரன்தான் அதிகம் என்று கேள்வி படுவது உண்மையா


வல்லவன்
செப் 03, 2024 13:40

அங்குள்ள 99% இந்திய உணவகங்கள் மற்றும் patel brothers இந்திய அங்காடிகளில் வேலை செய்வது இதுபோன்ற illegals அதிகம். கொத்தடிமை வாழ்க்கை. அவர்களுக்கு டாலர் ஒன்றே குறிக்கோள். immigration பிடித்தால் deport பண்ணிவிடுவார்கள். அதுவரை அங்கு இருப்பார்கள்


அப்பாவி
செப் 03, 2024 12:52

இங்கேதான் பாலும் தேனும் ஆறா ஓடுதே... அம்ரித்கால் உதசவ் நடக்குதே... போங்க அங்கே போய் சம்பாதிச்சு இங்கே அனுப்புங்க.


Ramesh Sargam
செப் 03, 2024 12:26

வெளிநாட்டு மோகம், தாய்நாட்டில் போதிய வேலைவாய்ப்பு இல்லாமை, சுத்தமான சுற்றுசூழல் என்று பல காரணங்கள் உள்ளது இந்தியர்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக நுழைவதற்கு.


S Ramkumar
செப் 03, 2024 11:58

இவர்களில் எந்த மாநிலத்தவர் அதிகம் என்று சொல்லுங்கள். பெரும்பாலும் பஞ்சாப்பை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அல்லது படேல்கள். இவர்களின் வாழ்க்கை குறிக்கோளே அமெரிக்க என்று குடி ஏறுவது தான்.


பாமரன்
செப் 03, 2024 10:40

எங்க ஜி 2014 ல் ஆட்சிக்கு வந்ததும் இந்தியா வல்லரசு ஆகிடும்னு எல்லா வெளிநாட்டு இந்தியர்களும் திரும்ப நாட்டுக்கே வந்திடுவாங்கன்னு புளகாங்கிதம் அடைஞ்சது பொய்யா கோப்ப்ப்ப்பால்... இப்போதான் புதிய கல்விக்கொள்ளையும் கொண்டு வந்தாச்சில்ல... அட்லீஸ்ட் பசு காவலர்கள் டூட்டிக்காவது திரும்ப வரலாம்ல...


P. VENKATESH RAJA
செப் 03, 2024 09:33

அமெரிக்க அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை