உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  சிரியா ஐ.எஸ்., கைதிகள் இடமாற்றம்

 சிரியா ஐ.எஸ்., கைதிகள் இடமாற்றம்

டமாஸ்கஸ்: சிரியாவில் உள்ள ஐ.எஸ்., கைதிகளை ஈராக்கிற்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. மேற்காசிய நாடான சிரியாவில், அதிபர் பஷார் அல் அசாத் ஆட்சி வீழ்த்தப்பட்டு, அகமது அல் ஷரா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், குர்து பழங்குடியினத்தவரின் ஆயுதக் குழுவான சிரிய ஜனநாயக படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு மாகாணங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. சமீபத்தில் அரசுப் படைக்கும், ஆயுதக் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது, சிறையில் இருந்த, 1,500க்கும் மேற்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தப்பினர். இதையடுத்து, 7,000க்கும் மேற்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதிகளை, ஈராக்குக்கு இடமாற்ற அமெரிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை 150 ஐ.எஸ்., கைதிகள் ஹசாகா மாகாணத்தில் உள்ள ஒரு தடுப்பு மையத்திலிருந்து ஈராக்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Arul Narayanan
ஜன 24, 2026 09:01

ஏன் ஈராக்கில் கொண்டு போய் விட வேண்டும்? எங்கேயாவது ஆள் நடமாட்டம் இல்லாத தீவில் விட வேண்டியது தானே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை