உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துருக்கியில் பயங்கரவாத தாக்குதல்: 4 பேர் பலி

துருக்கியில் பயங்கரவாத தாக்குதல்: 4 பேர் பலி

அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 14 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அங்காராவில் உள்ள விமான நிறுவன தொழிற்சாலை அருகே இச்சம்பவம் நடந்தது. இதனை அந்நாட்டு உள்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். இத்தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த இடத்தில் பெரும் புகைமூட்டமாக காணப்படுகிறது. சம்பவ இடத்தில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.அந்த இடத்திற்கு பாதுகாப்பு படையினர், போலீசார், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் விரைந்துள்ளன. இதனால், அந்த இடம் கலவரப்பகுதியாக காட்சியளிக்கிறது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. குர்தீஷ் பிரிவினைவாதிகள் அல்லது ஐ.எஸ்., பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனிடையே, அந்த பகுதியில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் உலா வருவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

J.V. Iyer
அக் 24, 2024 04:46

போர்கிஸ்தான் இப்போது துருக்கியில் தன் கைவரிசையை காட்ட ஆரம்பித்துவிட்டதா? சொறி வந்த கை சும்மா இருக்காதே.


Duruvesan
அக் 23, 2024 22:28

அவர்கள் எல்லோரும் தீவிரவாதி இல்லை,


அப்பாவி
அக் 23, 2024 21:42

யாரும் பொறுப்பேற்கலையா? இப்பிடி பொறுப்பில்லாம இருக்கீங்களே? மேலே 72 ஐ யாருக்கு குடுக்கணும்னு தெரியாம முழிப்பாங்களே.


RAJ
அக் 23, 2024 21:25

வினை விதைத்தவன் வினை அறுப்பான். கண்டிப்பா பாக்கியோட கை அங்க இருக்கும்.


Ramesh Sargam
அக் 23, 2024 21:11

இன்று உலகெங்கிலும் பயங்கரவாத தாக்குதலில் சிக்கி மக்கள் மிகுந்த வேதனையில் அவதிப்படுகிறார்கள். இந்த பயங்கரவாதத்தை தடுக்க, ஒழிக்க இந்தியா போன்ற ஒருசில நாடுகள்தான் முன்வருகின்றன. மற்றவை வேடிக்கை பார்க்கின்றன. இந்த நிலை மாறவேண்டும். உலகெங்கிலும் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும்.


Duruvesan
அக் 23, 2024 21:01

ஆக மூர்கனுக்கு பால் வார்ப்பது நல்லது இல்லை


R SRINIVASAN
அக் 23, 2024 20:55

காங்கிரெஸ் -ஐ வீட்டுக்கு அனுப்பவில்லை என்றால் இந்தியாவிலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் .


Jysenn
அக் 23, 2024 20:24

Sabash.