உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., சிறையில் தந்தையான பயங்கரவாதி: ஓவைசி விளாசல்

பாக்., சிறையில் தந்தையான பயங்கரவாதி: ஓவைசி விளாசல்

அல்ஜீயர்ஸ்: மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஜாஹியூர் ரஹ்மான் லக்வி, பாகிஸ்தான் சிறையில் இருந்தபோதே தந்தையாக அனுமதிக்கப்பட்டார் என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவரும், எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்கள், 33 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளன.இதில், பா.ஜ., - எம்.பி., வைஜெயந்த் பாண்டா தலைமையிலான குழு மேற்காசிய நாடுகளான சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் சென்றது. அடுத்ததாக, இந்த குழு வட ஆப்ரிக்க நாடான அல்ஜீரியா சென்றது. அங்குள்ள, புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் இந்த குழு நேற்று கலந்துரையாடியது. அக்குழுவில் இடம் பெற்றுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம்., - எம்.பி., அசாதுதீன் ஓவைசி பேசியதாவது: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாஹியூர் ரஹ்மான் லக்வி என்ற பயங்கரவாதி, பாகிஸ்தான் சிறையில் இருந்த போது, அவருக்கு அந்நாட்டு அரசு சிறப்பு சலுகை வழங்கியது. சிறையில் இருந்தபோதே, அவர் தந்தையாக அனுமதிக்கப்பட்டார். இது, வெறெந்த நாட்டிலும் நடக்காத ஒரு கொடுமை.இந்த விவகாரத்தில், சர்வதேச பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்பு அமைப்பான, எப்.ஏ-.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, பாக்., மீது உடனடி நடவடிக்கை எடுத்தது.ஆகையால், பாகிஸ்தானை மீண்டும் அந்த குழுவின் 'கிரே லிஸ்ட்' எனப்படும் சாம்பல் பட்டியலில் சேர்க்க உலக நாடுகள் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்த வேண்டும்.இதன் வாயிலாக, அந்நாட்டின் பயங்கரவாத சிறகுகள் முறிக்கப்பட வேண்டும். அப்பாவி மக்களை கொல்வதன் வாயிலாக, இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramasamy V.savadamuthu
ஜூன் 05, 2025 20:27

அசாதுதீன்ஓவைசி போன்ற தேசப்பற்று உள்ளவர்கள் இந்த நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்


Sundar R
ஜூன் 02, 2025 15:10

தமிழகத்தில் இருக்கும் தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத, ஊழல்களை செய்வதையே தொழிலாகக் கொண்ட, தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பல லட்சம் கோடி ரூபாய்களுக்கு அதிபதியான கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சிகளான திமுக, தவெக, நாதக, விசிக, மதிமுக மற்றும் மநீம ஆகிய கட்சிகளை, நம் நாடு ஆபத்தான நிலையில் இருக்கும் ஒவ்வொரு சமயத்திலும் சிறந்த தேசபக்தராக, சிறந்த நற்குடிமகனாக தன்னாலான அர்ப்பணிப்புகளைச் செய்து வரும் திரு ஓவைசி அவர்களின் வழிகாட்டுதலோடு முழுமையாக அழிக்க வேண்டும்.


SENTHIL NATHAN
ஜூன் 02, 2025 14:42

இவறை இந்த முரை வங்காளத்தில் பஜாக பயண்படுத்தி கொல்ள வேன்டூம்


Rajagurunathan V
ஜூன் 02, 2025 12:39

ஓவைசியின் கருத்துக்கள் ஒவ்வொரு இந்தியனும் உள் வாங்கி ஜாதி., மதம் கடந்து ஒருமைப்பட்ட இந்தியாவை உருவாக்குவோம்... வாழ்க பாரதம்...


metturaan
ஜூன் 02, 2025 09:48

எதிரிகளை நண்பனாக்கினாலும் எச்சரிக்கை தேவை பாரதமே


vbs manian
ஜூன் 02, 2025 09:47

ஆச்சர்யம் இவரா இப்படியா.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 02, 2025 07:56

அக்மார்க் மூர்க்கர்கள் ஒவைசி பாஜகவிடம் சோரம் போய்விட்டார் என்று புலம்பக்கூடும்... ஹா .... ஹா ....


VENKATASUBRAMANIAN
ஜூன் 02, 2025 07:48

இவருக்கு இருக்கும் நாட்டு பற்று கூட காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்டுகள் விசிக போன்றவர்களுக்கு இல்லை. இது மிகவும் துரதிஷ்டவசமானது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை