உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பஞ்சாபில் 14 தாக்குதல்கள் நடத்திய பயங்கரவாதி அமெரிக்காவில் கைது

பஞ்சாபில் 14 தாக்குதல்கள் நடத்திய பயங்கரவாதி அமெரிக்காவில் கைது

நியூயார்க்: பஞ்சாபில், 14 பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதி ஹர்ப்ரீத் சிங் என்ற ஹேப்பி பாசியா, அமெரிக்காவில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பஞ்சாபின் அமிர்தசரசை சேர்ந்தவர் ஹர்ப்ரீத் சிங். பயங்கரவாதியான இவர், கடந்த ஜனவரியில் அமிர்தசரஸில் உள்ள கும்தாலா போலீஸ் ஸ்டேஷன் அருகே, மூத்த அதிகாரியின் வாகனத்தை குண்டு வைத்து தகர்த்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றிருந்தார்.பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இவர் மீது பஞ்சாபில், 14 பயங்கரவாத தாக்குதல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடித்து கொடுத்தால், 5 லட்சம் ரூபாய் சன்மானம் தருவதாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்திருந்தது.இந்தியாவில் தீவிரமாக தேடப்படும் பயங்கரவாதியான இவருக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புடனும், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான பாபர் கல்சா இன்டர்நேஷனல் உடனும் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பஞ்சாபில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய இவர், பஞ்சாப் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.இந்நிலையில், அமெரிக்காவின் எப்.பி.ஐ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சேக்ரமென்டோ நகரில் ஹர்ப்ரீத் சிங்கை கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sasikumaren
ஏப் 19, 2025 16:24

இனி எந்த தீவிரவாத கொலையாளியும் உலகின் எந்த மூலைக்கு சென்றால் தப்பிக்க முடியாது தேவையான தகவல்களை பெற்று பிறகு சுட்டு தள்ள வேண்டும் இது மற்ற பயங்கரவாதிகளுக்கு மரண பயம் கொடுக்க வேண்டும்.


மனிதன்
ஏப் 19, 2025 11:03

உளறலின் உச்சம்


M Ramachandran
ஏப் 19, 2025 09:17

ஒரு காலத்தில் பஞ்சாபியர் வீரத்திற்கு பெயர் பெற்றவர்கள். குண்டடிக்கு கவலை படாமல் நெஞ்சை நிமிர்த்தி நின்றவர்கள். ஆனால் இன்றைய நிலமை கோழைகளாகி விட்டார்கள். அதற்க்கு காரணாம் பக்கத்துக்கு நாட்டு பயங்கர வாதிகள் என்ற கோழைகள்.


thehindu
ஏப் 19, 2025 08:42

மோடி சென்ற இடமெல்லாம் பயங்கரவாதிகளின் புகலிடமாகிவிட்டது


மனிதன்
ஏப் 19, 2025 11:04

உளறலின் உச்சம்..


thehindu
ஏப் 19, 2025 14:37

இந்துமதவாத மூடநம்பிக்கை விரக்தியின் உச்சம்


முக்கிய வீடியோ