உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப்- மஸ்க் மோதல் உச்சம்; டெஸ்லா நிறுவன பங்குகள் கடும் சரிவு

டிரம்ப்- மஸ்க் மோதல் உச்சம்; டெஸ்லா நிறுவன பங்குகள் கடும் சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: டிரம்ப் உடனான மோதலை அடுத்து எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் விலை 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப்- தொழிலதிபர் எலான் மஸ்க் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. டிரம்ப், எலான் மஸ்க் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவதால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டிரம்ப் உடனான மோதலை அடுத்து எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் விலை 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 150 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பு படி ரூ.13.14 லட்சம் கோடி) சரிந்துள்ளது. எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. மஸ்க்- டிரம்ப் உடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில் டெஸ்லா பங்குகள் மேலும் சரிவடையும் என முதலீட்டார்கள் கணித்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டிற்கு பிறகு, டெஸ்லா பங்குகள் உயர தொடங்கியது. கடந்தாண்டு, அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற போது, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு உயர தொடங்கியது. அவரது நிறுவன பங்குகள் மதிப்பும் உயர துவங்கியது. தற்போது மோதலால் சரிவை நோக்கி சென்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sankaranarayanan
ஜூன் 06, 2025 18:44

இது எங்களுக்கு முன்பே தெரியும் டிரம்பு கூடவே இருப்பவர்களை குழிதோண்டித்தான் புதைப்பர் தெரிந்துதான் யாருமே அவரது அரசியல் அவரை நம்பி யாருமே எதிலுமே இறங்கக்கூடாது என்பதற்கும் எல்லோருக்கும் இது ஒரு பாடம் தான் மட்டும் மேல்மேலும் பணக்காரனாக ஆகவேண்டும் அதற்கு வேண்டாதா வேலைகளையெல்லாம் செய்வார் புதுப்புது சட்டங்களை கொண்டுவருவார் பிறகு அவரே திகைப்பார் தலையில் கையை வைத்துக்கொண்டு அரசியலைவிட்டே ஓடிவிடுவார் விரைவில்


GMM
ஜூன் 06, 2025 13:35

நிதி , பாதுகாப்பு விவகாரங்களில் ஆளும் அரசியல்வாதிகள் முடிவு உடன் அமுலுக்கு வருகிறது. இது ஊழலை ஊக்குவிக்கும். முதலீட்டை அச்சுறுத்தும். வரி விதிகள் பெரிய தாக்கம் அந்த கட்சி ஆட்சி முடிந்த பின் தான் செயலுக்கு வரவேண்டும். அரசியல் வாதிகள் டிவிஎஸ் போன்ற சிறந்த தொழிலை முடக்கி, பயனற்ற டாஸ்மாக் போன்ற தொழிலை வளர்த்து விடுவர். நீண்ட காலம் கழித்து தான் பாதிப்பு தெரியும்.


Ramalingam Shanmugam
ஜூன் 06, 2025 13:11

கூத்தாடி கையில் கொடுத்தா எப்புடி இருக்கும் எல்லாம் கர்மா பிச்சை எடுக்க வைத்தவன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளி விடுவான்


Ramesh Sargam
ஜூன் 06, 2025 12:38

இருவரும் கொஞ்ச நாட்கள் காதலர்கள் போல கொஞ்சி குலாவினார்கள். இன்று அவர்கள் இடையே பிளவு. இதுவும் கர்மாதான். ஆம் டிரம்ப் இந்தியாவுக்கு செய்த பல அக்கிரமங்கள்.


Sureshkumar
ஜூன் 06, 2025 11:52

நாடகத்த நிறுவனங்கள் boss


ராஜா தென்காசி
ஜூன் 06, 2025 11:21

நன்றி கெட்ட டிரம்ப்


raju
ஜூன் 06, 2025 13:05

மோடியோட நண்பர் எப்படி