உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தாய்லாந்து பார்லி.,யை கலைக்க தற்காலிக பிரதமர் திடீர் முடிவு

தாய்லாந்து பார்லி.,யை கலைக்க தற்காலிக பிரதமர் திடீர் முடிவு

பாங்காக்: தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை அடுத்து, பார்லிமென்டை கலைக்க, அந்த நாட்டின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயாசாய் முடிவு செய்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நிலவுகிறது. இது தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பென்டோக்டர்ன் ஷினாவத்ரா, கம்போடியா முன்னாள் பிரதமர் ஹுன் சென் உடன் தொலைபேசியில் பேசினால். அப்போது, தன் நாட்டு தளபதியை குற்றம்சாட்டி அவர் பேசிய ஆடியோ கசிந்தது. இதையடுத்து நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மீறியதாக ஷினாவத்ராவை பிரதமர் பதவியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, அந்த நாட்டில் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் ஷினாவத்ராவின் பியு தாய் கட்சியைச் சேர்ந்த பும்தம் வெச்சயாசாய், தற்காலிக பிரதமரானார். இந்தக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக மக்கள் கட்சி கூறியுள்ளது. மேலும், பும்ஜைதாய் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும், விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் மக்கள் கட்சி கூறியுள்ளது. இந்நிலையில் ஆட்சி கைமாறுவதை தடுக்கும் வகையில், தற்காலிக பிரதமரான பும்தம் வெச்சயாசாய் பார்லிமென்டை கலைக்கும்படி, மன்னர் வஜிலோரங்கனிடம் நேற்று மனு கொடுத்தார். பார்லிமென்டை கலைத்து, உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிடும்படி அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை