உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா தாக்கிய அடுத்த நாளே மோதல் தீவிரம்: ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் ஒலித்த சைரன் சத்தம்!

அமெரிக்கா தாக்கிய அடுத்த நாளே மோதல் தீவிரம்: ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் ஒலித்த சைரன் சத்தம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு மத்தியில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நிலவுகிறது.அமெரிக்கா தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில் இஸ்ரேல் மீது ஈரான் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வீசி தாக்கியது. ஈரான் நடத்திய இந்த தாக்குதலில் பல இடங்கள் பற்றி எரிந்தன. குறிப்பாக டெல்அவிவ், ஹைபா உட்பட 10 இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்கா தாக்குதல் நடத்தி முடித்த சிறிது நேரத்தில் இஸ்ரேலும் ஈரான் மீது குண்டு வீசி இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qdbszr8h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பாலிஸ்டிக் ஏவுகணை

ஈரானில் தயார் நிலையில் இருந்த பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்களை குறி வைத்து இஸ்ரேல் குண்டு வீசியது. அதுமட்டுமின்றி, ஈரானின் போர்டோ அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் படையினர் தரைவழி தாக்குதல் நடத்தி உள்ளனர் என ஈரான் அரசு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.பல ஏவுதளங்களை தகர்த்ததோடு, அங்கிருந்த ஈரான் ராணுவ வீரர்கள் பலரையும் கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் இஸ்ரேல் மீது ஈரான் இன்று புதிய ஏவுகணை தாக்குதலை அரங்கேற்றி உள்ளது. ஈரான் சுமார் 15 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதில் சில இடங்கள் நேரடி தாக்குதலுக்கு உள்ளாகின.

ஒலிக்கும் சைரன்கள்!

குறிப்பாக ஜெருசலேமில் வெடிச்சத்தங்கள் கேட்டன. ஈரானில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதால் நாடு முழுவதும் சைரன்கள் ஒலித்தன. ஈரானின் புதிய ஏவுகணை தாக்குதலை, உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு அறிவுறுத்தி உள்ளது.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இதுவரை ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அதே நேரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானியர்கள் 850க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். 1500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ராமகிருஷ்ணன்
ஜூன் 23, 2025 17:55

சேத விவரங்கள் T V களில் தெளிவாக தெரிவிக்க முடியாதா. அங்கே குண்டு போட்டார்கள் இங்கே குண்டு போட்டார்கள் என்று தீபாவளி ராக்கெட் தான் காட்டுகிறது,


Nada Rajan
ஜூன் 23, 2025 17:25

மக்கள் தான் பாவம்.. அதிகாரிகள் அல்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை