உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் மிகவும் ஆபத்தான நகரம்: அதிபர் டிரம்ப் சொல்வது இதுதான்!

உலகின் மிகவும் ஆபத்தான நகரம்: அதிபர் டிரம்ப் சொல்வது இதுதான்!

வாஷிங்டன்: சிகாகோ உலகின் மிகவும் ஆபத்தான நகரம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிகாகோவில் 54 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், எட்டு பேர் கொல்லப்பட்டனர். இதுவரை சிகாகோ உலகின் மிக மோசமான மற்றும் மிகவும் ஆபத்தான நகரம். வாஷிங்டன்னில் நான் செய்தது போல் குற்றப் பிரச்னையை சிகாகோவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். குற்றப்பிரச்னையை விரைவாகத் தீர்ப்பேன். விரைவில் சிகாகோ மீண்டும் பாதுகாப்பாக இருக்கும், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக ஆக்க வேண்டும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.காரணம் என்ன? சமீப காலமாக சிகாகோ நகரில் கொலை குற்றங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நகரத்தில் சட்டவிரோத குடியேற்றமும் நடந்து வருகிறது. இதனால் டிரம்ப் தனது கட்டுப்பாட்டில் இந்த நகரத்தை கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இந்த சூழலில் தான் இந்த நகரத்தில் மீண்டும் அமைதியை கொண்டு வருவோம் என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.

3வது பெரிய நகரம்

அமெரிக்காவின் இலினொய் மாகாணத்தில் சிகாகோ உள்ளது. மக்கள்தொகையில், நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை அடுத்து, சுமார் 3 மில்லியன் மக்கள்தொகையுடன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகராக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
செப் 03, 2025 04:10

பல அமெரிக்க பெரு நகரங்களில் சட்டம் வேலை செய்யாது. இரவில் சென்றால் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. டவுன் டவுன் லாஸ் ஏஞ்செல்ஸ் முதல் நியூயார்க் வரை இதே நிலைதான்.


Vijay D Ratnam
செப் 03, 2025 02:22

சிகாகோ மட்டுமல்ல, லாஸ் வேகாஸ், டெட்ராய்ட், கன்சாஸ் சிட்டி, ஒக்லஹாமா, டெக்சாஸ், பால்டிமோர், ஹூஸ்டன் எல்லாமே கிரிமினல்ஸ் அதிகம் உள்ள ஊருதான். சான் பிரான்ஸிஸ்கொ, சான் டீகோ மட்டும் என்ன வாழுது, அங்கும் ரவுடிகள், விபச்சாரிகள், திருடர்கள், கஞ்சா, பிரவுன் சுகர் என எல்லா கருமமும் அமேரிக்கா முழுக்க அபரிமிதமா இருக்குது. சர்வசக்தி படைத்த வாஷிங்டன் டி.சி லேயே இருக்குது. என்ன இஸ்லாமிய பயங்கரவாதிகள் தொல்லை இல்ல. மத்தபடி எல்லா அயோக்யத்தனமும் பல்கி பெருத்து நிறைந்து இருக்குது. இன்னும் 25 ஆண்டுகள் கழித்து 2050 ல் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.


Tamilan
செப் 02, 2025 23:47

இனியும் டிரம்ப் மீதான கிலி போகவில்லை


Sun
செப் 02, 2025 23:26

உலகின் ஆபத்தான நகரம் சிகாகோ . உலகின் ஆபத்தான அதிபர் டொனால்டர் டிரம்பர்.


Ramesh Sargam
செப் 02, 2025 21:55

மொதல்ல அதை செய்யுங்க. பிறகு மற்ற நாடுகள் மீது வரி ஏற்றலாம்.


V K
செப் 02, 2025 21:33

இதற்கு எதாவது வரி போட முடியுமா தாத்தா சீக்கிரமா முடிவுக்கு கொண்டு வாங்கோ அப்போதான் நோபல் பரிசு கிடைக்கும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 02, 2025 21:51

தாத்தா வியாபார உத்தி காட்டி சீக்கிரமா முடிவுக்கு கொண்டு வருவார். நோபல் பரிசு உறுதி. ரஷ்யாவை அமெரிக்கா உடைத்தது போல அமெரிக்காவும் இவர் காலத்தில் உடைந்து போக வாய்ப்பு அதிகம் தென்படுகிறது.


முக்கிய வீடியோ