உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டனில் ஓட்டளிக்கும் வயது 16 ஆகிறது

பிரிட்டனில் ஓட்டளிக்கும் வயது 16 ஆகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டனில், 2029 பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்னதாக ஓட்டளிப்பதற்கான வயதை 18லிருந்து 16 ஆக குறைக்க உள்ளதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சி ஜூலை 2024 பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, ஓட்டளிக்கும் வயது குறைக்கப்படும் என உறுதியளித்தது. இந்நிலையில், ஓட்டளிப்பதற்கான வயது வரம்பை 16 ஆக குறைத்து நாடு முழுதும் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 16 வயது பூர்த்தியடைபவர்களின் பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
ஜூலை 18, 2025 11:44

ஏன், பிறந்த குழந்தைக்கும் வாகளிக்க உரிமை கொடுக்கலாமே! ஆங்கிலேயர்களின் படிப்பறிவே உயர்தது என்று உங்கள் பலர் கூவிக் கொண்டுள்ளனர்


முக்கிய வீடியோ