உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கவலை அளிக்கும் உக்ரைன் போர்; குவாட் தலைவர்கள் வேதனை

கவலை அளிக்கும் உக்ரைன் போர்; குவாட் தலைவர்கள் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'உக்ரைனில் நடக்கும் போர் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம்' என மோடி உள்ளிட்ட குவாட் நாடுகளின் தலைவர்கள் கூட்டு அறிக்கை வெளியிட்டனர்.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது. இதையடுத்து, குவாட் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7a36lse6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை அதிக பிரதிநிதித்துவம் கொண்டதாக மாற்றும் அவசரத் தேவையை உணர்ந்து சீர்திருத்தம் செய்வோம். சீர்திருத்தப்பட்ட பாதுகாப்பு கவுன்சில், ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கான பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.உக்ரைனில் நடக்கும் பயங்கரமான போர் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம். போர் துவங்கியதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் உக்ரைனுக்குச் சென்று, இதை நேரில் பார்த்திருக்கிறோம். இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை உட்பட, ஐ.நா., சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, அமைதியின் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பேச்சு!

குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: குவாட் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது மனித குலத்திற்கு முக்கியமானது. அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதியான தீர்வை ஆதரிக்கிறோம். உலகம் பதட்டங்கள் மற்றும் மோதல்களால் சூழப்பட்டிருக்கும் நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. குவாட்டின் 20வது ஆண்டு விழாவைக் கொண்டாட, அதிபர் பைடன் சொந்த ஊரான வில்மிங்டனை விட சிறந்த இடம் இருக்க முடியாது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியா தயாரித்துள்ளது.கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற சவால்களை நாங்கள் கூட்டாகச் சமாளிக்க முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். புற்றுநோயை குணப்படுத்த சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அவசியம். இந்தியா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை நடத்தி வருகிறது, மேலும் அனைவருக்கும் மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rpalnivelu
செப் 22, 2024 20:58

காமெடி ராகுல் எங்கே? உண்மையான காந்தி பெயரை திருடிக் கொண்டு இந்தியாவை சுரண்டும் இத்தாலிய மாபியா கூட்டம் என்றுதான் ஒழியுமோ?


அப்பாவி
செப் 22, 2024 18:42

ஆனாலும் ஆயுத விற்பனை நல்லா போயிட்டிருக்கு. ஆயில் விலை சல்லிசா கிடைச்சிருக்குன்னு சில தலைவர்கள் மகிழ்ச்சி.


Ramesh Sargam
செப் 22, 2024 12:57

குவாட் அமைப்பில் போரிடும் இரண்டு நாடுகளும் இல்லை. பிறகு இவர்கள் பேசுவதை அவர்கள் எப்படி புரிந்துகொண்டு போரை முடிவுக்கு கொண்டுவருவார்கள்? அமெரிக்கா ஒரு பக்கம் போரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று கூறுகிறது. மறுபக்கம் போர்செய்ய தேவையான ராணுவ பொருட்களை அதிக அளவில் தயாரித்து மற்ற நாடுகளுக்கு விற்று பணம் சம்பாதிக்கிறது. இது என்ன லாஜிக் எனக்கு புரியவில்லையே...


sankaranarayanan
செப் 22, 2024 11:46

ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர மோடி ஒருவரால் தான் முடியும் அமைதியை விரும்பும் இந்தியாவின் தலையிட்டால் இந்த போர் முடிவுக்கு வரும் மோடிதான் இதற்கு நாயகன்


அப்பாவி
செப் 22, 2024 18:42

அதான் ரயில்ல போய்ப் பாத்தாச்சே.. ஏதாவது முடிஞ்சுதா?


M Ramachandran
செப் 22, 2024 10:46

சதிகாரா தினவெடுத்த அமெரிக்கனே உக்ரேன் போர் நீள காரணம். அவசியமில்லா இடத்தில் மூக்கை நுழைப்பதால் அந்த நாட்டு மக்கள் படும் இன்னல் கள் அதிகம். அடுத்து வாங்கள தேசம். இதில் சப்பை மூக்கு காரனும் அவனுடன் கை கோர்த்து ஒரு வழி யாக்கி விட்டார்கள். இதெ போர்முலா இந்தியா மீதும் மறை முக போர் நடத்த இஙகுள்ள வெள்ளை எலியை பதவி மோகம் காட்டி பணத்தை அள்ளி கொடுத்து அவன் கால சுத்தி சுத்தி வருமப்டி செய்து அவனுடைய்யா ஏவாளியாகா செய்து விட்டான். நம் தேச தலைவர் நாட்டு பற்று மிக்கவராகா இருப்பதால் எதிரிகளை இனம் கண்டுள்ளார்


Kumar Kumzi
செப் 22, 2024 13:48

இந்தியா இன்னும் இந்தியாவாக இருக்குறதுக்கு காரணமே வட இந்தியர்கள் தான் தென் இந்திய கொத்தடிமைங்க ஓவாவுக்காக நாட்டை காட்டி குடுக்கவும் தயங்க மாட்டானுங்க


P. VENKATESH RAJA
செப் 22, 2024 10:08

உக்ரைன் போர் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
செப் 22, 2024 09:45

உக்ரைனுக்கு ஆயுதமும், பண உதவியும் செய்யும் அமெரிக்கா கூட ஐயோ .... போர் நடக்குதே ன்னு வேதனைப்பட்டுச்சுன்னா பார்த்துக்குங்க .....


புதிய வீடியோ