உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈபிள் டவரில் தீப்பற்றியது!

ஈபிள் டவரில் தீப்பற்றியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சின்னமாக விளங்கும் ஈபிள் கோபுரத்தில் இன்று தீப்பற்றியது. இதையடுத்து அவசர நடவடிக்கையாக, சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.பாரிஸ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஈபிள் கோபுரம். பிரான்ஸ் நாட்டின் பெருமைமிகு சின்னமாக கருதப்படும் இந்த கோபுரத்துக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் சென்று பார்வையிடுகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m2fstifv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று இந்த கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்தின் எலிவேட்டர் ஷாப்டில் தீப்பற்றிக் கொண்டது. தீயணைப்பு வீரர்கள், தீப்பற்றி எரியும் இடத்துக்கு அருகே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.இதையடுத்து அசம்பாவிதம் தவிர்க்க, ஈபிள் கோபுரத்திலும், அதன் அருகேயும் இருந்த சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து தீ அணைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

WINTECH XEROX - Adam Safi
டிச 25, 2024 16:14

ஈபிள் டவரில் உள்ள லிப்டில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதல் தளத்திற்கும், இரண்டாவது தளத்திற்கும் இடையே லிப்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது.தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. அவ்வளவுதான்.


பிரபு
டிச 24, 2024 23:49

இது தவறான தகவல்


Kasimani Baskaran
டிச 24, 2024 19:29

உயிர்ச்சேதம் இல்லை என்பது ஒரு ஆறுதல்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை