உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உனக்கென்ன வேலை இங்கே; ஐ.நா., பொதுச்செயலர் வருகைக்கு இஸ்ரேல் தடை!

உனக்கென்ன வேலை இங்கே; ஐ.நா., பொதுச்செயலர் வருகைக்கு இஸ்ரேல் தடை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு அந்நாடு தடை விதித்து உள்ளது.ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், பிறகு லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது விமானப்படை மூலமும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ருல்லா கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் ஆளுமை இல்லாதவர். அவர், இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை உலகின் பெரும்பாலான நாடுகள் கண்டித்துள்ளன. இதனை கண்டிக்காத யாரும், இஸ்ரேல் மண்ணில் கால் வைப்பதற்கு உரிமை இல்லை.ஹமாஸ் கொலைகார்கள் நடத்திய பாலியல் அட்டூழியங்களை கண்டிக்காத ஐ.நா., பொதுச்செயலாளர், அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கவில்லை.ஹமாசை சேர்ந்த பயங்கரவாதிகள், பலாத்கார குற்றவாளிகள், கொலைகாரர்களை கொண்ட ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி அமைப்பினரையும், சர்வதேச பயங்கரவாதத்தின் தாய்நாடான ஈரானுக்கும் ஆதரவளிக்கும் ஆண்டனியோ குட்டரெஸ், ஐ.நா., வரலாற்றில் ஒரு கறையாக எப்போதும் நினைவு கொள்ளப்படுவார். அவர் இல்லாமல், எங்களது குடிமக்கள் மற்றும் நாட்டின் பெருமையை பாதுகாக்க இஸ்ரேல் தொடர்ந்து முயற்சி செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Suresh Gurusamy
அக் 03, 2024 08:00

என்ன பண்ணுறது, அது India வின் சாப கேடு. சொந்த வீட்டுல உள்ள இருந்து கிட்டு காட்டியும் கொடுக்குறாங்க சில பேர்... அது தான் இந்தியா பக்கத்துக்கு நாடுகளை பார்த்து பயந்து தான் ஆகணும்....


Rajan
அக் 02, 2024 21:50

ஐநா வெற்று செலவு. அதற்கும் ஒரு தலைவர். இவர்களால் எந்த பிரச்சனையும் தீர்த்து வைக்க முடியாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 02, 2024 21:34

பிரச்னையைத் துவக்கியது ஈரான்தான் ....... ஐநா முதலில் அட்வைஸ் செய்யவேண்டியது ஈரானுக்குத்தான் ......


வெண்ணையன்
அக் 02, 2024 20:06

கடித்து குதற துடிக்கும் மூர்க்க வெறிநாய்களுக்கு எதற்கு கருணை??


Iniyan
அக் 02, 2024 19:40

இந்த ஐநா வும் நமது நீதி மன்றங்கள் ஒன்றே. இரண்டும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவும் அடைக்கலமும் கொடுக்கும் அமைப்புக்கள்.


Ramesh Sargam
அக் 02, 2024 19:32

ஐ.நா. வின் செயல் வருத்தமளிக்கிறது, ஆச்சரியமளிக்கிறது.


தமிழ்வேள்
அக் 02, 2024 19:02

பாலியல் வன்முறையை மதத்தின் பெயரால் நியாயப்படுத்தும் சர்வதேச சமூகத்தை கண்டிக்கவோ, தண்டிக்கவோ திராணியற்ற ஐ.நா மற்றும் பயங்கரவாத ஆதரவு நாடுகளுக்கு, இஸ்ரேலை கண்டிக்கவோ அவர்களின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை விமர்சனம் செய்யவோ எந்த அருகதையும் கிடையாது..


SP
அக் 02, 2024 18:54

இஸ்ரேல் செய்வது சரி. ஹமாஸ்,ஹிஸ்புல்லாவை பற்றி வாயே திறத்காத ஐ நா சபையினர்,இஸ்ரேலை கண்டிப்பது ஏன்?


SUBBU,MADURAI
அக் 02, 2024 19:04

ஐ.நா.சபை தொடங்கப் பட்ட 1945 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை அந்த சபை சாதித்தது என்ன என்று அதற்கு இதுவரை தலைமை வகித்த நாடுகளாலும் அதன் தலைவர்களாலும் சொல்ல முடியுமா? இஸ்ரேல் அவருக்கு தடை போட்டது நூறு சதவீதம் சரி.


சுந்தர்
அக் 02, 2024 18:54

இஸ்ரேல் சொல்வது சரிதான். ஐ.நா. அதன் வேலையை செய்வதே இல்லை. இவர் சும்மா தண்டச் சம்பளம் வாங்குபவர்.


தாமரை மலர்கிறது
அக் 02, 2024 18:49

இஸ்ரேலுக்குள் வரவிட்டு, ஐநா பொதுச்செயலாளரை கைது செய்வது நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை