மேலும் செய்திகள்
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டாவுக்கு துன்புறுத்தலா? இஸ்ரேல் மறுப்பு
10 hour(s) ago | 1
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரிட்டன் அரசு தீவிரம்
10 hour(s) ago
பாக்.,கிற்கு போர் விமான இன்ஜினா? ரஷ்யா மறுப்பு!
12 hour(s) ago | 7
பீய்ஜிங்: சீனாவின் வடமேற்கு மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் மொய்ஃபா புயல் தாக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் கடலேராப் குதியில் உள்ள 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீனாவின் வடமேற்கே உள்ள ஷாங்காய் கடற்கரையிலிருந்து 630 கி.மீ. தொலைவில் மொய்ஃபா எனும் புயல் மையம் கொண்டுள்ளது.மொபிஃயா புயல் காற்றினால் கடலில் அலை சீற்றம் ஏற்பட்டு சுமார் 11 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்தன. இந்த புயல் மெல்ல மெல்ல நகர்ந்து கிழக்கு கடற்கரை பகுதியான ஜிங்ஜிகாங் , பீய்ஜிங் ஆகிய மாகாணங்கள் வரை நகர்ந்து வரக்கூடும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இப்பகுதியில் வசித்து வரும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சீனாவின் பீய்ஜிங் கடற்கரைப்பகுதியிலிருந்து 10 மீன்பிடி படகுகளில் சென்ற 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாலை நேரமாகியும் கரை திரும்பாமல் மாயமாகிவிட்டதாக சீனாவின் கிழக்கு கடற்கரை பாதுகாப்புப்டை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. காணாமல் போன மீனவர்கள் ஷெடோங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை தேடும் பணியில் கடலோரப்படை காவல்படையினர் ஈடுபட்டுள்ளதாக ஷிங்கூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக பல்வேறு மாகாணங்களில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
10 hour(s) ago | 1
10 hour(s) ago
12 hour(s) ago | 7