உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 471 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட 3 பிணைக் கைதிகள்; மற்றவர்களையும் மீட்க நெதன்யாகு உறுதி

471 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட 3 பிணைக் கைதிகள்; மற்றவர்களையும் மீட்க நெதன்யாகு உறுதி

ஜெருசலேம்: 471 நாட்களுக்குப் பிறகு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பால் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் 3 பேர், இஸ்ரேல் வந்தடைந்தனர். மீதமுள்ள பிணைக்கைதிகளை மீட்பேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்தார்.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, கடந்த 2023, அக்., 7ல் போர் துவங்கியது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து துவங்கிய இந்தப் போர், பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5x2f6qsq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம், நேற்று மூன்று மணி நேர தாமதத்துக்குப் பின் அமலுக்கு வந்தது; இது, காசா பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகாம்களில் இருந்து தங்களுடைய வீடுகளுக்கு மக்கள் திரும்பத் துவங்கினர். 471 நாட்களுக்குப் பிறகு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பால் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் 3 பேரும், இஸ்ரேலில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தனர்.ரோமி கோனென், டோரன் ஸ்டெய்ன்பிரெச்சர் மற்றும் எமிலி டமரி ஆகியோர் இஸ்ரேலில் உள்ள தங்கள் தாய்மார்களுடன் மீண்டும் இணைந்தனர். அவர்கள் 3 பேரும் நலமாக இருக்கிறார்கள் என இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யார் இந்த 3 பேர்?

* 28 வயதான பிரிட்டிஷ்-இஸ்ரேலிய நாட்டவர் எமிலி. இவர் அக்டோபர் 7ம் தேதி 2023ம் ஆண்டு நடந்த, தாக்குதலின் போது பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டார். அவர் கையில் சுடப்பட்டு, வலுக்கட்டாயமாக காசாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.* காசாவின் வடமேற்கு எல்லைக்கு அருகில் உள்ள கிபுட்ஸ் கபர் அஸாவில் உள்ள அவரது குடியிருப்பில் இருந்து 31 வயதான டோரன் ஸ்டெய்ன்பிரேச்சர் என்ற கால்நடை செவிலியர் கடத்தப்பட்டார்.* ரோமி கோனென் வடக்கு இஸ்ரேலில் உள்ள தனது வீட்டிலிருந்து நெகேவ் பாலைவனத்தில் நோவா இசை விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தார். ஹமாஸ் படையினர் மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் எல்லையைக் கடந்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவரை ஹமாஸ் படையினர் கடத்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

என்றும் இந்தியன்
ஜன 20, 2025 17:19

இவளுங்களை வச்சிகிட்டு போரடிக்குது என்று திருப்பி அனுப்பி விட்டார்களா என்ன???மற்றவர்களை ஏன் விடுவிக்கவில்லை??? மூர்க்கன்னா மூர்க்கன் தான் அதான் மற்றவர்களை இன்னும் திருப்பி அனுப்பவில்லை. இதற்கு ஒரே தீர்ப்பு இஸ்ரேல் கொஞ்சம் இவர்கள் பட்டையை கிளப்பினால் சரியாகி விடுவார் ஹமாஸ்


KavikumarRam
ஜன 20, 2025 11:56

ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தற்போது உயிரோடு இருக்கும் அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கும் வரை ஹமாசுடனான போரை இஸ்ரேல் நிறுத்தக்கூடாது. கண்டிப்பாக நிறுத்தாது என்ற தீவிரமாக நான் நம்புகிறேன். கையில் கிடைத்திருக்கும் சிறப்பான வாய்ப்பினை இஸ்ரேல் சிறப்பாக பயன்படுத்திக்கிண்டிருக்கிறது. ஹமாஸின் கடைசி தீவிரவாதி அழியும் வரை அழித்தால் தான் இஸ்ரேல் நிம்மதியாக தூங்க முடியும். பாகிஸ்தானுடனான போரில், லாகூர் வரை பிடித்த பகுதிகளை, அப்போது ஆட்சியில் இருந்த கேவலமான அரசியல்வாதிகளால், ஒரு பிரயோஜனமும் இல்லாமல் எந்த கண்டிஷனும் போடாமல் இலவசமாக தாரைவார்த்துவிட்டு வந்த இந்தியாவின் முட்டாள்தனத்தை கண்டிப்பாக இஸ்ரேல் செய்யாது என்று நிச்சயமாக நம்பலாம். அந்த முட்டாள்தனத்தின் பலனை தாவூத் இப்ராஹிமின் மும்பை தொடர் குண்டுவெடிப்பு, கார்கில் போர், மும்பை தீவிரவாத தாக்குதல், புல்வாமா தாக்குதல்னு இன்றுவரை இந்தியா அனுபவித்துக்கொண்டிருக்கிறது.


Anand
ஜன 20, 2025 11:30

மூர்க்கனுங்களுக்கு தங்கள் இனத்தவர் ஒட்டுமொத்தமாக சிக்கி சீரழிந்து பசி பட்டினியுடன் சின்னாபின்னமாகி அழிவதை பற்றி கவலையில்லை, அடுத்த இனத்தவர் ஒன்றிரண்டு பேரை கொடுமைப்படுத்துவது தான் அவர்களுக்கு சந்தோஷத்தை தருகிறது... இவனுங்களுக்கு மூளை என்பதே கிடையாதா?


kantharvan
ஜன 20, 2025 17:17

கண்ணாடியை பார்த்து கொண்டு சொல்லவும்


Madras Madra
ஜன 20, 2025 10:50

471 ந்நாட்கள் எத்தனை பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டார்கள் மூர்க்கர்களுக்கு அவர்கள் இன மக்கள் உயிரை பற்றியும் கவலை இல்லை அழித்தொழிக்கப்பட வேண்டிய மன நிலை


subramanian
ஜன 20, 2025 08:45

இந்த புகைப்படத்தில் சிரிப்பது போல, இனி அவர்கள் வாழ்க்கையில் சிரிக்க முடியுமா? பாவிகள்... கூண்டோடு எரிந்து நாசம் ஆக வேண்டும்.


kantharvan
ஜன 20, 2025 17:28

ஹா ஹா ....ஹமாஸ்


N.Purushothaman
ஜன 20, 2025 08:35

ஹமாஸ் தன்னுடைய அமைப்பை கலைத்துவிட்டு வேறொரு பெயரில் ஜனநாயகக்கட்சியாக மாறி அந்த மக்களுக்கு அரசியல் ரீதியாக உதவலாம் ..அதை விடுத்து மீண்டும் ஆயுதங்களை ஏந்தினால் இன்னொரு பேரழிவு நிச்சயம் ....


தாமரை மலர்கிறது
ஜன 20, 2025 08:17

ஒருவருடத்திற்கு முன் குறும்புக்கார ஹமாஸ் செவெண்ணெனு இருந்த இஸ்ரேலை சொறிஞ்சுவிட்டதன் விளைவால் கை, கால், வீடு எல்லாவற்றையும் இழந்த ஹமாஸ் இன்று வெற்றி வெற்றி என்று ஆரவாரம் செய்வது பைத்தியக்கார செயலாக தோன்றுகிறது.


karthik
ஜன 20, 2025 09:28

அவனுங்க பைத்தியக்காரனுங்க தான் இதிலென்ன சந்தேகம்.. அவனுங்க மட்டும் இல்ல அவனுங்க பிடியில் இருக்கும் மொத்த மக்களுமே பைத்தியமாக மாற்றி வைத்திருக்கிறானுங்க .


Bahurudeen Ali Ahamed
ஜன 20, 2025 10:02

அகதிகளாக வந்த யூதர்கள் கிடைத்த இஸ்ரேலை விடுத்து, இடம் கொடுத்த பாலஸ்தீனியர்களை கொன்று குவித்து பாலஸ்தீன நிலப்பரப்பை ஆக்கிரமித்து சொந்த நாட்டிலேயே பாலஸ்தீனியர்களை அகதிகளாக்கியவர்களுக்கு எதிராக போராடாமல் வேறு என்ன செய்வார்கள்? இது ஒரு வருடத்திற்கு முன் தொடங்கியதில்லை திருட்டு இஸ்ரேலியர்கள் நிலத்தை திருட ஆரம்பித்ததிலுருந்தே தொடங்கியது, இந்த நூறுபேறுக்காக வருத்தப்படும் இளகிய மனம் படைத்தவர்களே ஆயிரக்கணக்கான 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இஸ்ரேலிய சிறைகளில் அடைபட்டிருக்கிறார்கள் என்பது தெரியுமா, பாதிக்கப்பட்ட எளியவனை விடுத்து வலியவனுக்கு துணைபோகும் மக்களே ஒன்று புரிந்து கொள்ளுங்கள் எளியவனை வலியவன் அடித்தால் வலியவனை இறைவன் அடிப்பான் .


N.Purushothaman
ஜன 20, 2025 12:42

பாய் ...இஸ்ரேலிய கட்டுமான பணியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டு இருந்தனர் ...அக் 7 க்கு பிறகு நிலைமை தலைகீழ் ...அவர்கள் இடத்தில தற்போது இந்திய தொழிலாளர்கள் உள்ளனர் .....பத்தாயிரம் குடும்பம் வருவாயில் ஹமாஸ் மண்ணை அள்ளிப்போட்டது தான் மிச்சம் ......இரு நாடு தீர்வு ஏற்படுத்திய போதே அதை பாலஸ்தீனம் ஏற்று கொண்டு இருந்தால் இன்று பிரச்னை இல்லாமல் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கலாம் ...அதை விடுத்து மதம் என்கிற புள்ளியில் இஸ்லாமிய நாடுகள் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போரை துவங்க அவர்கள் பயன்படுத்தி அந்த போரில் ஆறே நாட்களில் தோற்கடித்து சில பகுதிகளை ஆக்கிரமித்து கொண்டனர் ...எந்த ஒரு போரிலும் நிலங்களை ஆக்கிரமிப்பது பிரதானம் ....இது போர் செய்யும் முன்பே இதை எல்லாம் உணர்ந்து இருந்தால் இந்த நிலை வந்திருக்காது ....இருந்தாலும் அதற்க்கு பின் நடந்த போரில் ஆக்கிரமித்த இடங்களை எல்லாம் அந்தந்த நாடுகளுக்கு குறிப்பாக எகிப்து, ஜோர்டான் ,மற்றும் லெபனான் நாட்டு பகுதிகளை அவர்களிடமே இஸ்ரேல் திரும்ப கொடுத்தது .....இஸ்ரேலின் பலத்தை உணர்ந்து கொண்ட பல இஸ்லாமிய நாடுகள் அதை ஒரு பாடமாக எடுத்து கொண்டு அவர்களுக்குஎதிரான நிலைப்பாட்டை கைவிட்டு அவரவர் நாட்டின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு முடிவுகளை எடுக்க ஆரம்பித்தனர் ....இத எல்லாம் உணராத ஹமாஸ் ஈரான் பேச்சை கேட்டு கொண்டு மீண்டும் மீண்டும் தப்பு செய்ய இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது ....பாலஸ்தீனியர்களுக்கு எதிரியே இந்த ஹமாஸ் அமைப்பு தான்.....அந்த மக்களே அவர்கள் மீது கடும் கோபத்தில் தான் உள்ளனர் ....


Bahurudeen Ali Ahamed
ஜன 20, 2025 16:29

பாலஸ்தீனியர்கள் அவர்களின் இழந்த நிலத்தை நிலத்திற்கான உரிமைக்காக போராடினார்கள், இஸ்ரேலை அழிப்பதற்காக இல்லை


நிக்கோல்தாம்சன்
ஜன 20, 2025 07:46

நெதென்யாகு போன்ற தலைவராக விஜய்,சீமான் , அன்புமணி , அண்ணாமலை வருவாரா? தமிழர்களை காப்பாரா


A Viswanathan
ஜன 20, 2025 09:39

அப்பாவி பொது மக்களை பயணகைதிகளாக பிடிப்பதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.


KavikumarRam
ஜன 20, 2025 12:21

ஹலோ அண்ணாமலை ஓகே. அன்புமணி கூட சிறிதளவு ஓகே. ஆனால் சைமன் செபஸ்டியனும் , ஜோசப் விஜெயும் எவ்விதத்திலும் தமிழர்களின் பாதுகாவலர்கள் அல்ல. சைமன் அப்படியே பழைய தீயமுக போல் வாய் சாமர்த்தியதை மட்டும் வைத்து, வாயாலேயே வடை சுட்டுக்கொண்டு திரியிறார். இந்த கூட்டம் எல்லாம் ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற்றால் ஒரு முட்டாள்தனமான சர்வாதிகார நாசகார கூட்டம் மாதிரியே நடந்து கொள்ளும். கம்யுனிசம் மற்றும் புரட்சி பேசி நாசமாக போன கியூபா, சைனா, இலங்கை, மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் போல மேலும் நாசமாகும். மக்கள் கிள்ளுக்கீரையாக நடத்தப்படுவார்கள். விஜய் இன்னொரு ராகுல் காந்தி, உதயநிதி போல் ஒரு தத்தி. சினிமா புகழால் மின்னிக்கொண்டிருக்கும் ஒரு மின்மினிப்பூச்சி. அஞ்சு பைசா பிரயோஜனம் கிடையாது.


சமீபத்திய செய்தி