உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகளவில் மக்களை கவர்ந்த டாப் 100 நகரங்கள்; இந்திய நகரத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகளவில் மக்களை கவர்ந்த டாப் 100 நகரங்கள்; இந்திய நகரத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகளவில் மக்களை அதிகம் கவர்ந்த டாப் 100 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்னும் தர ஆய்வுகள் நடத்தும் நிறுவனத்தின் சார்பில் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து 4வது ஆண்டாக பாரிஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. மேட்ரிட் 2வது இடத்திலும், டோக்கியோ 3வது இடத்திலும், ரோம் 4வது இடத்திலும், மிலன் 5வது இடத்திலும் உள்ளன. நியூயார்க், ஆம்ஸ்டர்டேம், சிட்னி, சிங்கப்பூர், பார்சிலோனா ஆகிய நகரங்கள் டாப் 10ல் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு மற்றும் சுற்றுலாவிற்கு வழங்கப்படும் அதிக சலுகைகள் காரணமாக, பாரிஸிற்கு இந்த ஆண்டில் மட்டும்.79.3 கோடி பேர் வந்து சென்றுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் முதல் 100 இடங்களில் ஒரே ஒரு நகரம் மட்டுமே இடம்பிடித்துள்ளது. தலைநகர் டில்லி 74வது இடத்தில் உள்ளது. வேறு எந்த இந்திய நகரங்களும் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
டிச 06, 2024 07:26

வுடு கோவாலு. இந்தியா முன்னேறுவதைக் கண்டு வயத்தெரிச்சல் பட்டு இதுமாதிரி தப்புத் தப்பா புள்ளி விவரம் குடுக்கறாங்க. இது கர்ம பூமி. இது தர்ம பூமி. அப்பிடித்தான் குப்பையைப் போடுவோம். கண்ட இடத்தில் எரிப்போம். இத்தனை பொல்யூஷன்லேயும் எவ்வளவு ஹெல்த்தியா இருக்கொம். ஒரு பய சொல்றானா?


வைகுண்டேஸ்வரன்
டிச 05, 2024 21:45

வாழ்வதற்கு மிகவும் கடினமான நகரம், இந்தியாவிலேயே டெல்லி தான். குளிர்காலங்களில் மைனஸ் 5 டிகிரி வரை போகும். கோடைகாலங்களில் 45, 46 டிகிரி வரை உஷ்ணம் தாக்கும். மற்ற மாதங்களில் தூசி, புகை. விலைவாசி, டிராபிக் எல்லாம் தொந்தரவு தான்.


Oru Indiyan
டிச 05, 2024 17:21

இதற்கு காரணம் யார்? நாம். இந்திய மக்கள். அரசியல்வாதிகள் கேடு கெட்டவர்கள் லஞ்சம் வாங்கும் மிருகங்கள் என்றால் நாம் லஞ்சம் கொடுக்கும் தீவிரவாதிகள்...


Sudha
டிச 05, 2024 16:04

இந்தியா வில் பெஸ்ட் மும்பை என்றும் ஒர்ஸ்ட் டெல்லி என்றும் சின்ன குழந்தைக்கு கூட தெரியும். பழம் பெருமை பெரும் ஐரோப்பிய நாடுகளை விட நமது மதுரைரyuம் கோவா வும் சிறந்தவை


M.COM.N.K.K.
டிச 05, 2024 15:55

இதை நமது இந்தியநாட்டின் அரசியல் வெற்றி யாருக்கு என்ற கருத்துக்கணிப்புடன் ஒப்பிடலாம் அல்லவா.


சமீபத்திய செய்தி