உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரு மாசம் கூட ஆகலையே; எப்16 ரக விமானம் போச்சு; உக்ரைன் ராணுவம் புலம்பல்

ஒரு மாசம் கூட ஆகலையே; எப்16 ரக விமானம் போச்சு; உக்ரைன் ராணுவம் புலம்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட எப்16 ரக விமானம் நாட்டிற்கு வந்த சில வாரங்களில் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது உக்ரைன் ராணுவத்தினரை வேதனைப்பட வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் உக்ரைன் விமானி உயிரிழந்தார்.ரஷ்யா - உக்ரைன் போர், இரண்டு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் கணிசமான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றி விட்டது. அது மட்டுமின்றி தொடர்ந்து தாக்குதலும் நடத்தி வருகிறது.இதை எதிர்கொள்ள உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. ரஷ்ய ராணுவத்தை எதிர்த்துப் போரிட தங்களுக்கு எப் 16 ரக விமானங்கள் வேண்டும் என்று உக்ரைன், பல மாதங்களாக அமெரிக்காவிடம் வற்புறுத்தி வந்தது.ஆனால், தங்கள் தயாரிப்பு எப் 16 விமானத்தை கொடுத்தால் ரஷ்யா கொந்தளிக்குமே என்று பயந்து அமெரிக்கா பல மாதங்களாக இழுத்தடித்தது. ஆனால், உக்ரைன் அதிபரின் விடாப்பிடியாலும், போரில் ரஷ்யாவுக்கு வெற்றி வாய்ப்பு போய் விடக்கூடாது என்ற எண்ணத்தாலும், கடந்த மாதம் விமானங்களை வழங்கியது.

விமானி பலி

இப்படி வழங்கப்பட்ட எப்16 ரக விமானம் 2 நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கியது. ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ளும்போது நடந்த விபத்தில் விமானம் நொறுங்கியதா, ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்டதா என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை.இதில் விமானி மூன்பிஷ் கொல்லப்பட்டார். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. எப்16 விமான விபத்து உக்ரைனுக்கு பெரும் அடியாக கருதப்படுகிறது. இது பற்றி எப் 16 தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் சர்வதேச நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் நேரடி ஆய்வுக்கும் ஒத்துழைப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

புலம்பும் ராணுவத்தினர்

விலை மதிப்பு மிக்க எப் 16 விமானம், ரஷ்ய தாக்குதலை எதிர்த்து போரிடுவதற்கு பேருதவியாக இருந்தது. தங்கள் ராணுவத்துக்கு பக்க பலமாக இருக்கும் என்று நினைத்திருந்த வேளையில் இப்படி நொறுங்கிப்போனது வேதனையாக இருப்பதாக, உக்ரைன் அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் வருத்தப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sivagiri
ஆக 31, 2024 13:43

அமெரிக்காக்காரன் யாரையும் ஜெயிக்கவும் விட மாட்டான் - தோற்கவும் விட மாட்டான் - ஜெலங்கியிடம் இருந்து , வேட்டி, சட்டை , துண்டு , கோவணம் எல்லாம் உருவிட்டு , கையில் திருவோட்டை குடுத்து பெர்மெனென்ட்-டா , அமெரிக்காவுக்கு அடிமை ஆக்கிடுவான் - - - மோடி செய்யிறா மாதிரி - அமெரிக்காக்காரனை , எட்டடி தள்ளி நிக்க வைக்கணும் - புத்திசாலித்தனமா புடினிடம் நடந்து கொண்டால் தப்பிக்கலாம் . . .


M Ramachandran
ஆக 31, 2024 12:16

அமெரிக்க அடிமையாகி விட்டபின் புலம்புவதில் பயனில்லை. நம் மோடிஜியைய்ய யம் ஜெயகியாசங்கர் அவர்களையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். அடிமைய்ய வழியில் விழா வில்லை. அது மாட்டு மல்ல. நம்பிக்கையயை துரோகம் அதற்க்கு இஙகுள்ள சில்லறை அழுகுணி கட்சியை அரைட்ராயர் அரை டிக்கெட் நாட்டைய்ய காட்டி கொடுக்க அமெரிக்கா கொடுக்கும் . நம் நாடு சுற்றி விரோதிகள் வேறு உள்நாட்டு த்ரோகிகள் வேறு எவ்வளவு ரஸ்சியாதான் நமக்கு உற்ற தோழனாகா இருந்து கொண்டிருக்கு. இந்திரா காந்தி இருக்கும் போதும் இந்த அமெரிக்கா நம்மைய்ய அழிக்க முற்பட்ட போது ரஷயா தான் நம் மானதைய்ய காப்பற்றிற்று.


Palanisamy Sekar
ஆக 30, 2024 15:11

உக்ரைனின் காமெடி நடிகர் ஆட்சி செய்ய வந்து தன்னை மிகப்பெரிய தலைவராக கருதி நேட்டோவில் சேர்ந்து ரஷ்யாவை உண்டு இல்லை என்று செய்துவிடலாம் என மனக்கோட்டை காட்டினார். ஆனால் அதில் ஏற்பட்ட இழப்பானது இன்னும் நூறு ஆண்டுகளுக்கு உக்ரைன் மக்களின் தலையில் விழுந்து சுமையாக கணக்கும். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி மக்களை அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க முயற்சி செய்திட வேண்டும். ரஷ்யாவை ஒருக்காலும் உக்ரைனால் வெல்ல முடியாது. நேட்டோ நாடுகளின் ஆயுத பரிசோதனை கலமாக இந்த போர் பயன்படுத்த படுகின்றது. தேவையாக வீண் சண்டை. நேட்டோவில் சேர்ந்து என்ன சாதிக்க போகிறார் உக்ரைன் கோமாளி நடிகர். இழப்பின் உச்சத்தில் இருப்பதால் வேறு வழியே இல்லை உக்ரைண்ணுக்கு. அணு ஆயுதம் எனவும் சந்தர்ப்பத்தை உக்ரைன் கொடுத்துவிடும் என்பதுதான் உலகமே அஞ்சுகின்றது. யோசிக்காமல் சரண் அடைவதை தவிர வேறு வழியில்லை உக்ரைனுக்கு


அப்பாவி
ஆக 30, 2024 15:10

என்னது? ரயில்ல போயும் போர் நிக்கலியா? இது போருக்கான நேரம்.இல்லை. நிறுத்திட்டு தளவாடம் வாங்குங்க.


Ramarajpd
ஆக 30, 2024 11:15

போர் முடியாது இழுத்தடிப்பார் புடின். அதற்குள் அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகள் முடிந்து விடும். இப்போதே பாதி நாடுகளில் பணவீக்கம் கடந்த 20-30 வருடங்களை ஒப்பிடும் போது அதிகமாகத் தான் உள்ளது ??


புதிய வீடியோ