உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வர்த்தகப் போர் எதிரொலி:ஹாலிவுட் படங்களுக்கு சீனா கட்டுப்பாடு

வர்த்தகப் போர் எதிரொலி:ஹாலிவுட் படங்களுக்கு சீனா கட்டுப்பாடு

பீஜிங்: அமெரிக்க-சீனா வரிப்போர் காரணமாக, ஹாலிவுட் படங்களுக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சில நாட்களாக, வர்த்தக போர் நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று சீனப் பொருட்களின் மீதான வரிகளை 125 சதவீதமாக உயர்த்தினார், அதே நேரத்தில் சீனா 84 சதவீத பழிவாங்கும் வரியை விதித்துள்ளது.இந்த வர்த்தகப் போரின் எதிரொலியாக, ஹாலிவுட் படங்கள் மீது சீனா சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது.இது குறித்து சீன திரைப்பட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான மோதல் அதிகரித்து வருவதால், சீனாவில் திரையிடப்படும் அமெரிக்காவின் ஹாலிவுட் திரைப்படங்களின் எண்ணிக்கையை மிதமாக குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.நாங்கள் சந்தை சட்டத்தைப் பின்பற்றுவோம், பார்வையாளர்களின் விருப்பத்தை மதிப்போம், அமெரிக்க படங்களின் எண்ணிக்கையை மிதமாகக் குறைப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.ஏற்கனவே, வெளிநாட்டுப் படங்களின் எண்ணிக்கையை பீஜிங்கில் ஏற்கனவே கட்டுப்படுத்தி வருகிறது. இருப்பினும், சீனாவின் இந்த நடவடிக்கை, அமெரிக்க ஸ்டுடியோக்களுக்கு ஒரு அடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஏப் 11, 2025 03:54

என்று காப்பி ரைட் சட்டத்தை மதித்து சீனர்கள் பணம் கொடுத்து படம் பார்த்தார்கள்? காப்பி அடித்து இணையத்தில் பதிவேற்றி விடுவார்கள்.. வீட்டில் உள்ள 100 இன்ச் டீவியில் இலவசமாக பார்த்து ரசிப்பார்கள்.


மீனவ நண்பன்
ஏப் 11, 2025 00:41

சீனாவில் இங்கிலிஷ் பலருக்கும் புரியாது ..


Srinivasan Krishnamoorthy
ஏப் 10, 2025 22:38

it is no use.china has to face new reality. else other countries with lower tariff take us markets. US won't be impacted by chinese tariffs since US imports to china are negligible


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை