வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆழ்ந்த இரங்கல்
நைஜர்: வடக்கு மத்திய நைஜீரியாவில் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழந்தனர்.நைஜீரியாவில், குறிப்பாக மழைக்காலங்களில் படகு விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஆனாலும் அந்த நாட்டு மக்களுக்கு படகு போக்குவரத்து தான் முக்கியத்துவமாக வாய்ந்ததாக இருக்கிறது. நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் பயணிகள் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மலாலே மாவட்டத்தில் உள்ள துங்கன் சுலேவிலிருந்து துக்காவுக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பத்து பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர்.படகு அதிக சுமையுடன் இருந்ததால், மரத்தின் அடிப்பகுதியில் மோதியதால் படகு கவிழ்ந்ததின் விபத்திற்கான காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
ஆழ்ந்த இரங்கல்