டபுள்-டெக் பஸ் மீது ரயில் மோதி விபத்து: மெக்சிகோவில் 8 பேர் பலி
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் டபுள்-டெக் பஸ் மீது ரயில் மோதியதில் 8 பேர் பலியாகினர், மேலும் 45 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மெக்சிகோ சிட்டியின் வடமேற்கே உள்ள அட்லகோமுல்கோ நகரில் இன்று அதிகாலை ரயில்வே கிராசிங்கில் சிக்கிய டபுள்-டெக் பஸ் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்தனர்.இந்த விபத்து குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:இந்த விபத்து நடந்த இடம், தொழிற்சாலைகள் நிறைந்த தொழில்துறை பகுதி. இங்குள்ள ரயில்வே கிராசிங் அருகே டபுள்-டெக் பஸ வந்த நிலையில் பஸ் பிரேக் செயலிழந்தது. அப்போது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் பஸ்சில் பயணித்த 8 பேர் பலியானார்கள். மேலும் 45 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.