உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு எதிராக வலுவான ஆதாரம் இல்லை: ஒப்புக்கொண்டார் கனடா பிரதமர்

இந்தியாவுக்கு எதிராக வலுவான ஆதாரம் இல்லை: ஒப்புக்கொண்டார் கனடா பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க வலுவான ஆதாரம் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டார்.வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்தாண்டு செப்டம்பரில் குற்றஞ்சாட்டினார். இதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6z2zvm6y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே, நிஜ்ஜார் கொலையில் கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா உள்பட சில இந்திய தூதரக அதிகாரிகளை கனடா தொடர்புபடுத்தியது. இதனால் கனடாவில் இருந்து சஞ்சய் வர்மா மற்றும் 5 இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்தது. இந்நிலையில், நிருபர்கள் சந்திப்பில் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவாளிகளின் தொடர்பு குறித்து உளவுத் தகவலின் அடிப்படையில் தான் குற்றச்சாட்டை முன்வைத்தேன். இது குறித்து, சமீபத்தில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் கேள்வி எழுப்பி இருப்பேன். ஆனால் அதை நாங்கள் தவிர்த்தோம்.

இறையாண்மை

நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணையில் இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்த்தோம். இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க வலுவான ஆதாரம் இல்லை. இணைந்து பணியாற்றி ஆதாரத்தை கண்டறியலாம் என தெரிவித்தோம். இதற்கு இந்தியா முன்வரவில்லை. விசாரணைக்கு இந்தியா சிறிதும் ஒத்துழைக்கவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான கருத்துடைய கனடா நாட்டவர்கள் குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் சேகரித்துள்ளனர். இறையாண்மையை இந்தியா மீறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Mohan
அக் 17, 2024 16:22

வலுவான ஆதாரம் இல்லை. இணைந்து பணியாற்றி ஆதாரங்களை கண்டறியலாம் என்று இந்தியா அதிகாரிகளை கேட்டோம் ஒத்துழைக்கவில்லை. ஏனய்யா ஜஸ்டின் டுரூடோ அவர்களே இந்த மாதிரி அறிவிலித்தனமாக அறிக்கை விட உங்களுக்கு கேவலமாக இல்லை ? முதலில் யாரிடமாவது புத்தியுடன் பேசுவது எப்படி என்று பாடம் படிக்கவும். வந்துட்டாரு நாட்டை ஆள


Raa
அக் 17, 2024 13:19

ஆகையால், எப்போதும்போல இப்பவும் ஆதாரம் இல்லாமல் உளறிக்கொண்டுதான் இருந்தாயா?


Natesan Narayanan
அக் 17, 2024 12:14

கனடா நெருப்புடன் விளையாடுது , இவர்கள் கனடா நாட்டை பிரித்து கொடுக்க சொல்வார்கள்


Naga Subramanian
அக் 17, 2024 11:08

கனடா திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் ட்ருடோ. இப்படித்தான் எதிர்பார்பார்க்க முடியும்.


GoK
அக் 17, 2024 11:00

இவன் வாரிசு திருட்டு அரசியல் செய்யும் வழியில் வந்தவன்.


Anand
அக் 17, 2024 10:45

வெட்கமாக இல்லையா உனக்கு? தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களை ஊக்குவித்து, இந்தியாவிற்கு எதிராக சதிச்செயலில் ஈடுபடும் நீ கேவலமான பிறப்பாக தான் இருப்பாய். கெடுவான் கேடு நினைப்பான்...


RAMAKRISHNAN NATESAN
அக் 17, 2024 10:22

இந்த விஷயத்தில் அமெரிக்காவும், பிரிட்டனும் ஊமைக்குசும்பர்கள் .....


Vivekanandan Mahalingam
அக் 17, 2024 10:10

கனடாவின் ரவுல் வின்சி - ஓட்டுக்காக உளறிவிட்டு இப்போது முழிக்குது - எப்போது வேண்டுமென்றாலும் பதவி போகும் நிலைலையில் உள்ளார்


theruvasagan
அக் 17, 2024 10:08

எங்கள் தேசத்தின் இறையாண்மைக்கு சவால் விடும் நபரோ குழுவோ இயக்கமோ அது உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதை அழிக்க எங்களுக்கு முழு உரிமை உண்டு. இஸரேலும் தற்போது அதையே செய்து வருகிறது. தீவிரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்து வளர்ப்பவர்கள் தங்கள் நாட்டின் இறையாண்மையில் தலையீடு என்று கூப்பாடு போடுவது அக்கிரமம் அநீதி. அதற்கு நாங்கள் செவி சாய்க்க வேண்டிய அவசியம் இல்லை.


veeramani
அக் 17, 2024 09:37

ஏம்பா ..ஜெஸ்ட்டின் த்ருடூ .. நீயும் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போல உளறுகிறாயோ .. எதற்கு எடுத்தாலும் பாரதபிரதமர் திரு மோடி ஜீயை குறை சொல்லுகிறாய். வாய் புளித்தது மாங்காய் புளித்ததோ என பேசக்கூடாது. இந்தியாவை எவரும் பிரிக்கவோ துன்னடாவூ நினைத்தாலே அவர்கள் அதன் பயனை அனுபவிக்கவேண்டும். இந்தியர்கள் எவருக்கும் பயப்படும் நிலையில் இல்லவே இல்லை. கனடாவிற்கு இது பொருந்தும்


சமீபத்திய செய்தி