வாசகர்கள் கருத்துகள் ( 1 )
useless attempt TRUMP ATTEMPT IS WASTE BCZ HE IS NOT CAPABLE FOR MEDIATION
வாஷிங்டன்; காசா பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஐ.நா.வில் இஸ்லாமிய தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறி உள்ளதாவது; நியுயார்க்கில் நடைபெறும் ஐநா சபை கூட்டத்தின் போது 8 அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பலதரப்பட்ட சந்திப்பை நடத்துவார். இந்த கூட்டத்தில் கத்தார், சவுதி அரேபியா, இந்தோனேசியா, துரக்கி, பாகிஸ்தான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடுவார்கள். மேலும் ஐநா சபைக் கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றும்போது, உலகம் முழுவதும் அமெரிக்காவின் வலிமை மற்றும் நட்பை மேம்படுத்துவது குறித்து பேசுவார். உலகமயமாக்கலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை அழைப்பார். மேலும், உலகநாடுகள் முன்னேற்றத்துக்கான ஆக்கப்பூர்வமான யோசனைகளையும், கருத்துகளையும் அவர் பகிர்வார்.வெள்ளை மாளிகை திரும்பும் முன்னர், 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்களுக்கு டிரம்ப் விருந்தளிப்பார். அங்கு அவர் துருக்கி அதிபர் எர்டோகனை வரவேற்பார்.இவ்வாறு செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.
useless attempt TRUMP ATTEMPT IS WASTE BCZ HE IS NOT CAPABLE FOR MEDIATION