உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / திருமணத்தின் மூலம் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் சிக்கல்; டிரம்ப் நிர்வாகம் வைத்த செக்

திருமணத்தின் மூலம் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் சிக்கல்; டிரம்ப் நிர்வாகம் வைத்த செக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க குடிமகன்கள் அல்லது க்ரீன் கார்டு பெற்றவர்களை திருமணம் செய்பவர்களுக்கு குடியுரிமை வழங்கும் நடைமுறைகளை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடுமையாக்கியுள்ளது.முன்பெல்லாம் அமெரிக்கர்களையோ அல்லது அமெரிக்காவில் க்ரீன் கார்டு பெற்றவர்களையோ திருமணம் செய்தால், உடனடியாக அமெரிக்க குடியுரிமை கிடைத்து விடும். குடியுரிமை பெறுவதற்கான இன்டர்வ்யூ நடைமுறைகள் இல்லாமல், அந்நாட்டு குடிமகன் ஆகிவிடலாம். ஆனால், தற்போது அந்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்றி வரும் டிரம்ப் நிர்வாகம், திருமணத்தின் மூலம் நாட்டின் குடிமகன்களாவதிலும் செக் வைத்துள்ளார். அமெரிக்க குடிமகனின் வாழ்க்கை துணைவியர், குடியுரிமை பெற ஐ-130 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பத்திற்கு அனுமதி கொடுக்க 14 மாதங்களாகும். அதன்பிறகு, அமெரிக்க அதிகாரிகளின் இன்டர்வ்யூக்கு மூன்றரை மாதங்கள் எடுத்துக் கொள்ளப்படும். ஆக மொத்தம் 17 முதல் 20 மாதங்களாகலாம். அதேபோல, அமெரிக்க க்ரீன் கார்டு வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணைவியர், எப்2ஏ க்ரீன் கார்டு பெறும் நடைமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணைவியர்கள் க்ரீன் கார்டு பெற 3 முதல் 4 ஆண்டுகள் காலம் தேவைப்படும். வாழ்க்கை துணைவியர்கள் எச்-1பி வேலை விசா பெற்று, ஏற்கனவே அமெரிக்காவில் வசித்து வந்தால், அவர்கள் க்ரீன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். அவர்களிடம் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றதல் துறை அதிகாரிகள் இன்டர்வ்யூ செய்வார்கள், என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

என்றும் இந்தியன்
ஏப் 14, 2025 17:10

அப்போ அமெரிக்க மாப்பிள்ளை cancelled நம்முடைய மனதிலிருந்து


Sampath Kumar
ஏப் 14, 2025 16:44

இனி அமெரிக்கா ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்தலும் ஒன்றற்கும் பிரயோசனம் இல்லை இங்கே ஒரு கிரிபிட பிறவினை சேர்ந்த கும்பல் தான் தினம் அமெரிக்கர்களை மணந்தார் இப்போ அவனுகளுக்கு வயிற்றில் பிள்ளையை கரைத்து இட்டரு இவரு கோவிந்த கோவிந்த


zahirhussain
ஏப் 14, 2025 13:29

நடைமுறை மாற்றங்களால் பாதிக்கப்படப்போவது என்னமோ அமெரிக்காதான் இந்தியர்கள் தனது திறமையைக்கொண்டு எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்ளலாம்.


dummyD watcher
ஏப் 14, 2025 11:37

USA dont want to be like UK, which is full of Muslim Mayors


S. Venugopal
ஏப் 14, 2025 11:29

அமெரிக்காவில் மன்னாரு அண்ட் கம்பெனியில் வேலையில் இருப்பவர்கள் இங்கு அப்பாவிப் பெண்களையும் அவர்களது பெற்றோர்களையும் ஏமாற்றும் வேலை கொஞ்சம் குறையும்


mei
ஏப் 14, 2025 10:42

இனி அமெரிக்க மாப்பிள்ளை தான் வேணும்னு பொண்ணுங்க அடம் புடிக்க முடியாது


M Ramachandran
ஏப் 14, 2025 10:31

ஒன்று எனக்கு புரிய வில்லை. பிரிட்டன் ஐரோப்பிய நாடுகளில் பிரச்னைகள் உண்டு. அதாவது அகதிகளுக்கு அந்நாடு கொட்டி கொடுக்கின்றது. அமெரிக்காவில் அதுபோன்று கிடையாது. கையிலெ காசு வாயில தோசை பல மொழி போல் அங்கு வாழ்க்கை முறை. பின் ஏன் இந்த மிரட்டல்.


jaya
ஏப் 14, 2025 11:38

ஐரோப்பாவை பல நாடுகள் விட அமெரிக்காவில் ஒரே நாடு குடியேறும் அகதிகள் மிக மிக அதிகம் .


Suppan
ஏப் 14, 2025 12:13

சௌகரியத்துக்காக திருமணம் Marriage of convenience என்ற நடைமுறையை ஒழிக்கவந்த சட்டநடைமுறை இது. "திருமணம்" செய்து கொண்டு அமெரிக்கக் குடியுரிமை கிடைத்தவுடன் விவாகரத்து செய்துகொண்டு விடுவர். அந்தப்பெண்/ஆணுக்கு "வெகுமதி" கிடைக்கும். இதற்கு ஏஜெண்டுகளும் உள்ளனர்


சமீபத்திய செய்தி