உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிபிசி மீது சட்ட நடவடிக்கை; நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர போவதாக டிரம்ப் அறிவிப்பு

பிபிசி மீது சட்ட நடவடிக்கை; நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர போவதாக டிரம்ப் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: மன்னிப்பு கேட்ட போதிலும் பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அவர் 5 பில்லியன் டாலர்கள் வரை (இந்திய மதிப்பில், 44 ஆயிரம் கோடி ரூபாய்) நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர போவதாக அறிவித்தார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்பான ஒரு ஆவண படத்தை, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் பி.பி.சி., செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில் டிரம்ப் ஆற்றிய உரையை பி.பி.சி., திருத்தி வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த, புகாரில், பி.பி.சி., செய்தி நிறுவனத்தின் இயக்குநர் டிம் டேவி, செய்திப் பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இந்த நிறுவனம் தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.ஆனாலும் பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இது குறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது: நாங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடுப்போம். அடுத்த வாரத்தில் 5 பில்லியன் டாலர்கள் வரை (இந்திய மதிப்பில், 44 ஆயிரம் கோடி ரூபாய்) வரை நஷ்ட ஈடு கேட்டு அவர்கள் மீது வழக்கு தொடர் இருக்கிறேன். நாங்கள் அதைச் செய்ய வேண்டும்.அவர்கள் ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் அதைச் செய்யாமல் இருந்திருக்க முடியாது. அவர்கள் ஏமாற்றினர். என் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை அவர்கள் மாற்றினர். இது மிகவும் மோசமானது. நீங்கள் அதைச் செய்யாவிட்டால், மற்றவர்களுக்கு இது மீண்டும் நிகழாமல் தடுக்க முடியாது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

naranam
நவ 16, 2025 03:56

இதோடு பிபிசி யை மூடிவிட வேண்டும்.


rama adhavan
நவ 15, 2025 21:38

பிபிசி இடதுசாரி தொலைக்காட்சி.அன்னாட்டின் உதவி பெருக்கிறது பிரிட்டிஷ் அரசு முஸ்லிம்களுக்கு எப்போதும் சப்போர்ட் செய்யும். அதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் பிடிக்காது. எனவே பொய் மூட்டைகளை அவிழக்கும் அடிக்கடி. இதனால் டிரம்ப் செய்தது சரியே.


NARAYANAN
நவ 15, 2025 18:39

இந்திய அரசு நீண்ட காலமாக செய்ய தவறியதை இந்த மனிதராவது கையில் எடுத்துள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.பொய் உரைப்பதையே தொழிலாக கொண்ட ஒரு கேடுகெட்ட நிறுவனம்.கண்டிப்பாக விலை கொடுத்தே ஆகவேண்டும்.


RAJ
நவ 15, 2025 18:23

Very good decision. BBC is the worst channel.High favorism.. Mr. President is correct.


Field Marshal
நவ 15, 2025 18:06

காசு கொடுக்க தயாரா இருந்தா ட்ரம்பை என்ன வேணும்னாலும் …


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை