உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு சதவீதம் வரி: அறிவித்தார் டிரம்ப்

எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு சதவீதம் வரி: அறிவித்தார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இறக்குமதிக்கான வரி விகித்தை அறிவித்தார். இதில் 15 நாடுகளுக்கு எவ்வளவு சதவீத வரி என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளார்.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே, அவர் இறக்குமதி வரிகளை அதிகரித்து அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wi92jll9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும்படி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தார்.அதன்படி, இந்தியவில் இறக்குமதி பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்துள்ளார்.மேலும் ஒவ்வொரு நாடுகளும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரிகளை விதித்தும், அதேபோல் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்த நாடு வரிகளை விதித்து அறிவித்துள்ளார்.ஆட்டோமொபைல்ஸ் மீதான வரிவிதிப்பு வருகிற 4 ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.இது குறித்து ஓவல் அலுவலகத்தில் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் அறிவித்துள்ளதாவது,இன்றைய தினத்தை அமெரிக்காவின் விடுதலை நாள் . அமெரிக்காவை விட பிற நாடுகள் தான் அதிகமான வரிகளை விதிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அதோடு அங்குள்ள உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது இதனை சரிசெய்ய வேண்டும். இதற்காக ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனியாக கூடுதல் வரி என்பது விதிக்கப்படும். அமெரிக்காவின் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை போல் அதற்கு நிகராக பிற நாடுகளுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும் இவ்வாறு டிரம்ப் கூறினார். டிரம்பின் இந்த நடவடிக்கையால் வர்த்தக போர் என்பது தொடங்கும் நிலை உருவாகி உள்ளது.வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விகிதம் வருமாறுவியட்நாம்: 46 சதவீதம்தைவான்:32 சதவீதம்ஜப்பான்: 24 சதவீதம்இந்தியா: 26 சதவீதம்தென்கொரியா: 25 சதவீதம்தாய்லாந்து: 26 சதவீதம்சுவிட்சர்லாந்து: 31சதவீதம்இந்தோனோஷியா: 32 சதவீதம்மலேஷியா: 24 சதவீதம்கம்போடியா: 49 சதவீதம்பிரிட்டன்: 10 சதவீதம்தென்ஆப்ரிக்கா: 30 சதவீதம்பிரேசில்: 10 சதவீதம்வங்கதேசம்: 37 சதவீதம்சிங்கப்பூர்: 10 சதவீதம்இஸ்ரேல்: 17 சதவீதம்பிலிப்பைன்ஸ் 17 சதவீதம்சீலி: 10 சதவீதம்ஆஸ்திரேலியா: 10 சதவீதம்பாகிஸ்தான்: 29 சதவீதம்துருக்கி: 10 சதவீதம்இலங்கை: 44 சதவீதம்கொலம்பியா : 10 சதவீதம்பெரு: 10 சதவீதம்நிகரகுவா:36 சதவீதம்நார்வே: 30 சதவீதம்கோஸ்டாரிகா: 17 சதவீதம்ஜோர்டான்: 40 சவீதம்டொமினிக் குடியரசு: 10 சதவீதம்யு.ஏ.இ.: 10 சதவீதம்நியூசிலாந்து : 20 சதவீம்அர்ஜென்டினா: 10 சதவீதம்ஈகுவாடர்: 12 சதவீதம்கவுமேலா: 10 சதவீதம்ஹோண்டுரஸ்: 10 சதவீதம்மடாகஸ்கர்: 93 சதவீதம்மியாமனர்: 88 சதவீதம்துனீஷிய: 55 சதவீதம்கஜகஸ்தான்: 54 சதவீதம்செர்பியா- 74 சதவீதம்எகிப்து: 10 சதவீதம்சவுதி அரேபியா- 10 சதவீதம்எல்சல்வாடார்: 10 சதவீதம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mr Krish Tamilnadu
ஏப் 03, 2025 13:44

வேல்டு காமன் மணி என்று - உலக பொது பணம் கொண்டு வந்து, ரூபாய் மதிப்பை அதிகப்படுத்த வேண்டும். அமெரிக்க சர்வர் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும், ஆஃப்களுக்கும் வரி விதிக்கணும். அமெரிக்க கண்டுபிடிப்புகளை பயன்படுத்த ஒரு வருட தடை விதிக்கணும். இப்படி பூச்சாண்டி காட்டுனா தான், போண்டா க்குள்ள முட்டை எப்படி வைச்சாங்க அப்படிகிற மாதிரி, ரொம்ப தீவிரமாக யோசிச்சு, தற்காலிக வரி விதிப்பை ஒத்தி வைப்பாங்க. பிறகு புதுசா ஒரு பூச்சாண்டி, திராவிட வழி காட்டுதலில் வரும் நாம் இத கூட கற்று கொள்ளவில்லை என்றால் எப்படி?


Sampath Kumar
ஏப் 03, 2025 08:12

வரி வட்டி கிஸ்தி யாரிடம் கேக்கிறாய் வீர பாண்டியன் வசனம் நினைவுக்கு வருகிறது இவருக்கு கட்டம் சரியில்லை போல அமெரிக்காவின் அழிவிட்கு இவரே காரணம் ஆக போகிறார்


KRISHNAN R
ஏப் 03, 2025 07:47

ரெண்டாயிரம், மூனாயிரம் நாலாயிரம்.... பிஸ்கோது.... பாண்டியராஜன் சினிமா வசனம்.. நினைவு கூர்ந்து பாருங்க


VENKATASUBRAMANIAN
ஏப் 03, 2025 07:39

சீனா எவ்வளவு


Kumar
ஏப் 03, 2025 07:14

இப்படி அமெரிக்கா தன் நாட்டிற்கு சாதகமான செயல்களை மட்டுமே செய்யும் போது, அதை ஏன் அனைத்து நாடுகளுக்குமான வல்லரசாக நாம் ஏற்க வேண்டும்? இன்னும் ஏன் நாம் செய்யும் அந்நிய பரிவர்த்தனைகளை US Dollar இல் செய்ய வேண்டும்?


Raj
ஏப் 03, 2025 07:02

20% மேல் வரி விதித்துள்ள நாடுகள் ஏற்றுமதி செய்யாமல் இருந்தால் போதும்.


skanda kumar
ஏப் 03, 2025 06:48

இந்தியா பொருள்கள் மீது வரி 26%பெரிய்ய பாதிப்பு இல்லை. அனால் நாம் விதிக்கும் வரி குறைந்தால் ரூபாய் மதிப்பு குறையும்.


Subramanian
ஏப் 03, 2025 06:22

It may affect USA only. The countries which may find uneconomical to export to USA, will find natives. The water will find its own level and that is nature. This will result in shortage of products in USA and increase the inflation multifold.


SANKAR
ஏப் 03, 2025 07:28

Yes.you are right.But Trump wants exactly this to spur local production on the face of shortage and inflation.This is the core of his MAKE ANERICA GREAT AGAIN pilicy


Gnana Subramani
ஏப் 03, 2025 05:50

ஜி ஒரு போன் பண்ணினால் போதும் டிரம்ப் இந்தியாவிற்கான வரியை நீக்கி விடுவார்


Kacha Theevai Meetpom
ஏப் 03, 2025 07:39

அறிவுக்கொழுந்து …200 புது உபியா ?


Anbarasu K
ஏப் 03, 2025 03:03

ஆஹா பெரியண்ணா ஏன் இப்படி பண்றீங்க பெரியண்ணா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை