உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தேசிய அவசர நிலை பிரகடனம்; ஒப்புக்கொண்டார் டிரம்ப்!

தேசிய அவசர நிலை பிரகடனம்; ஒப்புக்கொண்டார் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தவும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தவும், ராணுவத்தை பயன்படுத்தும் திட்டம் இருப்பதாக, அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் உறுதிப்படுத்தினார்.அமெரிக்கா அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் களம் இறங்கிய டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் ஜனவரி மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்றுக் கொள்ள உள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது, சட்டவிரோதமாக குடியேறிவர்களை விரட்டி அடிப்பேன் என தனது கொள்கையை டிரம்ப் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, 'அதிபராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் உக்ரைன், ரஷ்யா இடையே நடக்கும் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்' என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eo7msjqm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சூழலில், ட்ரூத் சோசியல் மீடியாவில், ' டிரம்ப் தலைமையிலான ஆட்சியில், தேசிய அவசரநிலை கொண்டு வரப்படும். ராணுவத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக புலம் பெயர்ந்தவர்களை நாடு கடத்த உள்ளார்' என ஒருவர் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு பதில் அளித்த டிரம்ப், உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். இந்த பதில் சர்வதேச அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 20, 2024 11:40

நமது நாட்டிலும் இது போல் செய்ய வேண்டும். கூடவே வெளி நாட்டு கை கூலிகளை அந்த அந்த நாடுகளுக்கே நாடு கடத்த வேண்டும்.


Sathyanarayanan Sathyasekaren
நவ 19, 2024 22:28

இது போல் ராணுவத்தின் உதவியுடன் ஊடுருவி உள்ள பங்களாதேஷ், ரோஹிங்கிய துலுக்கர்களை விரட்டவேண்டும்.


N Sasikumar Yadhav
நவ 19, 2024 20:38

பாரதநாட்டிலும் இதுபோல அவசரநிலை பிரகடனப்படுத்தி சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் ரோஹிங்கியா மற்றும் பங்களாதேச பயங்கரவாத கும்பலுங்களையும் வெளியேற்றினால் தான் பாரதம் முழுக்க அமைதியாக இருக்கும்.


prabhu
நவ 19, 2024 15:28

திரு டிரம்ப் அவர்களே அஜித் நெஸ்ட் Movie Update கொடுங்க


Balasubramanian
நவ 19, 2024 14:47

அங்கும் நீட் தேர்வு ரத்து போல வாக்குறுதிகள்! பார்க்க தானே போகிறோம்!


kantharvan
நவ 19, 2024 14:34

நீங்க பற்ற வைத்த நெருப்பு ஒன்று உங்களை பற்றியெரிய காத்திருக்குது ??


Palanisamy T
நவ 19, 2024 17:44

இதுதானப்பா உண்மை, பற்றவைத்த நெருப்பல்ல, தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் பேசிய பேச்சு, குறள் அருளியது போன்று "நா காக்க காவாக்கால்" என வாசகங்களின் பின் விளைவுகளை அவர் சந்திக்கப் போகின்றார்.


GMM
நவ 19, 2024 13:33

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு முன், இந்திய காஸ்மீர் ,வட கிழக்கு மாநிலங்களில் அவசர நிலை அவசியம்.


Bye Pass
நவ 19, 2024 13:09

ஹ1B விசாவில் இந்தியர்கள் அமெரிக்க பொருளாதாரத்தை முன்னேற்றுகிறார்கள், முறையாக வரிகட்டுகிறார்கள் ..கிறீன் கார்டு கானல் நீராக இருக்கிறது ..திருட்டு தனமாக நுழைபவர்கள் சலுகை அனுபவிக்கிறார்கள்


kantharvan
நவ 19, 2024 16:02

பை பை பைபாஸ் .. பைடேன்.


SUBBU,MADURAI
நவ 19, 2024 12:35

US President elect Donald Trump has confirmed that he is ready to a national emergency and deploy the military to deport illegal immigrants.


முக்கிய வீடியோ