உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சட்டவிரோதமாக குடியேறிய 6,000 பேரை இறந்தவர்களாக அறிவித்தார் டிரம்ப்

சட்டவிரோதமாக குடியேறிய 6,000 பேரை இறந்தவர்களாக அறிவித்தார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய வர்களாக கருதப்படும் 6,000 பேர் இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்களின் சமூக பாதுகாப்பு எண் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அவர்கள் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yufd23vc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். தேர்தல் பிரசாரத்தின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, அங்கு சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

அதிரடி அறிவிப்பு

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை கணக்கெடுத்து, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நம் நாட்டைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் அமெரிக்க ராணுவ விமானங்கள் வாயிலாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில், மற்றொரு அதிரடி அறிவிப்பை டிரம்ப் மேற்கொண்டுஉள்ளார்.இதன்படி, சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படும் 6,000 பேரை இறந்ததாக, டிரம்ப் அரசு அறிவித்துள்ளது.இதையடுத்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட சமூக பாதுகாப்பு எண் ரத்து செய்யப்பட்டுஉள்ளது. அமெரிக்காவில் வாழ்வதற்கு அந்த எண் அவசியம் என்ற நிலையில், அது ரத்து செய்யப்பட்டுஉள்ளதால், அவர்கள் தாங்களாகவே அந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

சமூக எண்கள் ரத்து

இறந்தவர்களாக அறிவிக்கப்பட்ட 6,000 பேரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களின் சமூக எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர்களால் அங்கு வசிக்கவோ, வேலை செய்யவோ, வேறு சலுகைகளை பெறவோ முடியாது.

சமூக பாதுகாப்பு எண் என்றால் என்ன?

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும், வேலைக்காக தற்காலிகமாக தங்கி இருப்பவர்களுக்கும் அந்நாட்டு அரசால் ஒன்பது இலக்க பாதுகாப்பு எண் வழங்கப்படுகிறது. இந்த எண், வருமானம் மற்றும் சமூக பாதுகாப்பு உட்பட பல்வேறு அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு வழங்கப்பட்ட சமூக பாதுகாப்பு எண்ணை ரத்து செய்வதன் வாயிலாக, வங்கி உள்ளிட்ட அடிப்படை சேவைகளை பயன்படுத் துவதில் அவர்களுக்கு சிரமம் ஏற்படும். இதன் வாயிலாக, அவர்கள் தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

subramanian
ஏப் 13, 2025 13:51

தமிழ்நாட்டில் இப்படி செய்ய முடியுமா? செய்தால் வாயை மூடிக் கொண்டு இருப்பாரா?


Karthik
ஏப் 13, 2025 10:37

இதுக்கு பேரு தான் ஆப்பு .ஆப்பு னா இப்படி இருக்கணும்..


பிரேம்ஜி
ஏப் 13, 2025 07:55

ட்ரம்ப் மட்டுமே தலைவருக்கு வேண்டிய புத்திசாலித்தனமான முடிவெடுக்கும் திறமை இயல்பாகவே அமைந்தவர்!


Srinivasan Krishnamoorthy
ஏப் 13, 2025 05:05

excellent


மீனவ நண்பன்
ஏப் 13, 2025 02:23

அமெரிக்காவில் குழந்தை பிறந்த ஓரிரு நாளில் சோஷியல் செக்கூரிட்டி கார்ட் கிடைத்துவிடும் .. அம்மா அப்பா அமெரிக்க குடிமகன்களா என்று ஆஸ்பத்திரியில் கேட்பதில்லை


Bhakt
ஏப் 13, 2025 01:09

Vice move


SANKAR
ஏப் 13, 2025 21:01

it should be Wise move and not Vice move!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை