உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆசியான் மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டார் டிரம்ப்: கோலாலம்பூரில் மலேசிய எதிர்க்கட்சி போராட்டம்

ஆசியான் மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டார் டிரம்ப்: கோலாலம்பூரில் மலேசிய எதிர்க்கட்சி போராட்டம்

கோலாலம்பூர்; ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேசியாவுக்கு புறப்பட்டார். அவரின் வருகையை எதிர்த்து, கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு, மலேசிய இஸ்லாமிய கட்சியினர் போராட்டம் நடத்தினர்.மலேசியாவில் அக்.26ம் தேதி முதல் அக்.28ம் தேதி வரை 3 நாட்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஆசியான் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரேசில் அதிபர் டிசில்வா உள்ளிட்ட பல நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட உறுப்பு நாடுகளும் மாநாட்டில் பங்கேற்கின்றன.மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேசியா புறப்பட்டார். ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கும் அவர் பயணிக்க உள்ளார். அதிபராக பதவியேற்ற பிறகு., முதல் முறையாக மலேசியா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு செல்கிறார். தமது 5 நாள் பயணத்தின் கடைசி நாளில் அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இருக்கிறார்.இதனிடையே டிரம்பின் மலேசிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான மலேசிய இஸ்லாமிய கட்சியினர் திரண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், காசா விவகாரத்தில் டிரம்பின் நிலைப்பாட்டைக் கண்டித்து முழக்கமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sankaranarayanan
அக் 25, 2025 21:16

ஆசியான் மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டார் டிரம்ப்: கோலாலம்பூரில் மலேசிய எதிர்க்கட்சி போராட்டம் ஈ–க்கு என்ன வேலை இரும்பு பட்டறையியல் என்பது போன்ற அமெரிக்க அதிபருக்கும் ஆசியான் மாநாட்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது எஞ்சிய ஆசிய நாடுகளிடையே சண்டையை மூட்டிவிட்டு பிறகு நான் தான் சமாதானம் செய்தேன் என்று சொல்லி நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யுங்கள் என்று அற்ப புத்தியுடன் சொல்லக்கூடும்


Nanchilguru
அக் 25, 2025 19:55

தெரியாம கூப்பிட்டுட்டாங்க, மற்ற தலைவர்கள் பாடு கஷடம் தான்


Saai Sundharamurthy AVK
அக் 25, 2025 18:58

பிரதமர் மோடிஜி அங்கு போகாமல் இருப்பது தான் சரியாகும். டிரம்பை நம்ப முடியாது. வேறு எதையாது பேசி பொய் சொல்லி விடுவார். யாரையாவது கூப்பிட்டு தன்னை புகழ்ச்சியாக பேச சொல்வார். அந்த வாய்ப்பு மோடிக்கு கொடுத்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. ஆகவே தான் மோடி உஷாராக செயல்படுகிறார்.


Akash
அக் 25, 2025 17:01

Only Stalin has Charm ... A catalyst for Vidyal worldwide


SUBRAMANIAN P
அக் 25, 2025 13:53

மோடிக்கு உலகம் முழுவதும் செல்வாக்கு வரவேற்பு என்றால் டிரம்புக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு.. இதை சம்பாதிக்கத்தான் அதிபராக ஆகி இருக்கிறார் டிரம்ப்.. டிரம்புக்கும் மோடிக்கும் பனிப்போர், ஈகோ யுத்தம் ஆரம்பம்.


SANKAR
அக் 25, 2025 14:57

it is islamics who agitate.there is no worldwide opposition for Trump.The one with wold vide respect as per your view cited deepavali on 26 and 27 for non participation.Trump coming


duruvasar
அக் 25, 2025 17:23

People seldom understand the Geo politics. It requires reading of global events and analyse the moves behind it.


புதிய வீடியோ