உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நடிகைக்கு பணம் தந்த வழக்கு தண்டனையின்றி தப்பினார் டிரம்ப்

நடிகைக்கு பணம் தந்த வழக்கு தண்டனையின்றி தப்பினார் டிரம்ப்

நியூயார்க்: ஆபாச பட நடிகைக்கு ஒரு கோடி ரூபாய் தந்த வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் டிரம்புக்கு தண்டனை ஏதும் வழங்காமல் விடுவித்தது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப், வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இவர் கடந்த 2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு, பொய் கணக்கு எழுதி தன் வழக்கறிஞர் வாயிலாக ஒரு கோடி ரூபாய் தந்ததாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றம், டிரம்பை குற்றவாளி என கடந்த மாதம் அறிவித்தது. அப்போது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்ததால், நீதிபதி, தண்டனையை அறிவிக்காமல் ஜன., 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கில் டிரம்புக்கு தண்டனை அறிவிக்கப்பட்டால், அவர் அதிபராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், டிரம்ப் சிறை, அபராதம் போன்ற எந்த தண்டனையும் இல்லாமல், வெறும் குற்றவாளி என்று மட்டும் அறிவிக்கப்பட்டு, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் டிரம்ப் நிம்மதிஅடைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி